விவசாயத்தின் ஆதரவுத் தொழில் என்றால் அது கால்நடை வளர்ப்புதான். இருப்பினும் பெண்களையும் இதில் ஈடுபடுத்திக்கொள்ளும் வகையிலும், அவர்களையும் வருமானம் ஈட்டுபவர்களாக மாற்றும் விதமாகவும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டமே 100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழிகள் வளர்ப்பு திட்டம்.
தமிழகம் முழுவதும் பெண்களுக்கு, அசில் ரக கோழி வளர்ப்புக்கு 100 சதவீத மானியத்தில் குஞ்சுகள் வீதம் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்திங்களில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 400 பேர் வீதம் 5,600 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒரு பயனாளிக்கு 4 வார வயதுடைய 25 அசில் ரக கோழிக் குஞ்சுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு வாய்ப்பு (Call for ladies)
பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படும் இத்திட்டத்திற்கு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தில் பதிவு பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
விதிகள் (Norms)
-
அந்தந்த கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
-
ஏற்கனவே, விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு அல்லது செம்மறியாடு மற்றும் கோழி வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள், இத்திட்டத்தில் பயன் பெற இயலாது.
-
விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
-
30 சதவீதம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி(How to apply)
தகுதியான ஏழைப் பெண் பயனாளிகள் தங்களது கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.
மேலும் படிக்க...
மாட்டுச் சாணத்தில் இருந்து குளியல் சோப், டீ - வியப்பூட்டும் விபரங்கள்!
காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை - ராமநாதபுரம் விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments