தமிழக அரசின் தன்னிகரில்லாத் திட்டம் -பெண் குழந்தை இருந்தால் உங்களுக்கும் 50 ஆயிரம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Government of Tamil Nadu's Superb Scheme -
Credit ; You tube

நாட்டின் கண்களாகிய பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், திருமண காலத்தில் பெற்றோருக்கு அவர்கள் பாரமாக மாறிவிடக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டும், தமி­ழக அரசு சிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்­டத்­தின் மூலம் பெண் குழந்தை பிறந்­தால், அக்குழந்தை பெய­ரில் 50 ஆயி­ரம் ரூபாய் செலுத்தப்படும். இத்திட்டத்துக்கு பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
பெண் குழந்தை 1-08-2011க்கு முன்பு பிறந்த குழந்தையாக இருந்தால் 25,000 ரூபாய் வழங்கப்படும்.

உங்கள் பெண் குழந்தை 1-8-2011க்கு பிறகு பிறந்தக் குழந்தையாக இருப்பின் 50,000ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் 1-8-2011 அன்றோ அதற்கு பிறகோ பெண் குழந்தை பிறந்திருக்க வேண்டும். குடும்பத்திற்கு ஒரே பெண் குழந்தையாக இருந்தால், அக்குழந்தையின் நிலையான வைப்புத் தொகையான 50,000 ரூபாய் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, அக்குழந்தையின் பெயரில் ரசீது வழங்கப்படுகிறது.

இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் புதுப்பிக்கப்பட்டு, 18 வருடங்கள் நிறைவடைந்ததும், அப்போதைய வட்டி விகிதத்துடனும், கல்வி ஊக்கத்தொகையுடனும் கூடிய முதிர்வுத்தொகை, அக்குழந்தைக்கு மேம்பாட்டு நிறுவனத்தினால் காசோலையாக வழங்கப்படுகிறது.

விதிகள் (Rules)

  • இத்திட்டத்தின்கீழ் பயன்பெற பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள், அரசு மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும்.

  • பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது.

  • ஆண்டு வருமானம் ரூ. 72,000க்குள் இருக்க வேண்டும்.

  • இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • மேலும் இத்­திட்­டத்­தின் மூலம் பலன் பெற்­ற­வர்­கள் பின்­னா­ளில் ஆண் குழந்­தையை தத்து எடுத்­துக் கொள்­ளக் கூடாது.

கல்வி உதவித்தொகை (Scholarship)

இத்­திட்­டத்­தில் சேரும் குழந்­தைக்கு ஆண்­டு­தோ­றும் கிடைக்­கும் வட்­டியை, வைப்­புத்­தொகை வழங்­கப்­பட்ட ஆறாம் ஆண்­டில் இருந்து இரு­ப­தாம் ஆண்டு வரை கல்வி உத­வித்­தொ­கை­யாக வழங்­கப்­ப­டும்.

விண்­ணப்­பம் (How to apply)

இதற்­கான விண்­ணப்­பம் ஒவ்­வொரு மாவட்ட சமூக நல அலு­வ­ல­கத்­தில் கிடைக்­கி­றது. அவ்­வாறு இல்­லை­யென்­றால் http://cms.tn.gov.in/sites/def/ault/files/forms/socialwelfareschemes.pdf என்ற இணைய தள முக­வ­ரிக்கு சென்று டவுன்­லோட் செய்து கொள்­ள­லாம். பின்­னர் விண்­ணப்­பத்தை பூர்த்தி செய்து அவற்­றில் குறிப்­பிட்­டுள்ள உறு­தி­மொழி சான்­றி­தழ்­களை இணைத்து மாவட்ட சமூக அலு­வ­ல­ரி­டம் கொடுக்க வேண்­டும்.

ஆவணங்கள்

  • குழந்­தை­யின் பிறப்பு

  • சான்­றி­தழ்

  • வரு­மா­னச்­சான்று

  • இருப்­பி­டச்­சான்று

  • கருத்­தடை அறுவை சிகிச்சை செய்து கொண்­ட­தற்­கான சான்று

  • சாதிச்­சான்று

  • பெற்­றோ­ரின் வய­துச்­சான்று

  • ஆண் வாரிசு இல்லை என்­ப­தற்­கான வட்­டாட்­சி­யர் வழங்­கும் உறு­திச்­சான்று

  • குடும்ப அட்­டை­யின் நகல்

  • குடும்ப புகைப்­ப­டம்

அணுக வேண்­டிய அலு­வ­லர்

மாவட்ட சமூ­க­நல அலு­வ­லர், மாவட்ட திட்ட அலு­வ­லர்­கள் ( ஒருங்­கி­ணைந்த குழந்தை வளர்ச்சி திட்­டம் ), குழந்தை வளர்ச்சி திட்ட அலு­வ­லர்­கள், விரி­வாக்க அலு­வ­லர்­கள்( சமூக நலம் ), ஊர் நல அலு­வ­லர்­கள்.

மேலும் படிக்க...

கடலூரில் வேளாண் துறை சார்பில் பெண் விவசாயிகள் தின விழா!

வெட்டுக்கிளித் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவது எப்படி?

English Summary: Government of Tamil Nadu's Superb Scheme - If you have a girl, you will be given 50 thousand! Published on: 16 October 2020, 04:56 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.