Krishi Rin Mafi Yojana: விவசாய கடனில் ரூ.50000 தள்ளுபடி- கவனம் ஈர்க்கும் ஜார்க்கண்ட்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Krishi Rin Mafi Yojana scheme

ஜார்க்கண்ட் மாநில அரசு, விவசாயிகள் பெற்ற பயிர் கடனில் ரூ.50,000 தள்ளுபடி செய்யும் வகையில் 'கிரிஷி ரின் மாஃபி யோஜனா'  என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது மற்ற மாநில விவசாயிகளின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? இதில் பயன்பெறுவதற்கான தகுதிகள் என்னவெல்லாம் என்பதை தமிழக விவசாயிகள் தெரிந்துக் கொள்ளும் வகையில் இந்த கட்டுரையில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது.

குறுகிய கால பயிர்க் கடன் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதிச்சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஒரு விவசாயிக்கு ரூ.50,000 தள்ளுபடி செய்யும் வகையில் பிப்ரவரி 1, 2021 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை சுமார் 4,68,715 விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் அடைந்துள்ளனர்.

Krishi Rin Mafi Yojana:

விவசாயிகள் மாறிவரும் காலநிலை, சந்தையில் விளைப்பொருட்களுக்கு போதிய விலையின்மை, விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை, இடுப்பொருள் செலவு உயர்வு என்கிற பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதனை சமாளிக்க கடன் வாங்குவதே தவிர வேறு வழியில்லாமல் சிறு, குறு விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் தவித்து போயிருக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு Krishi Rin Mafi Yojana திட்டம் ஜார்க்கண்ட் மாநில அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் குறுகிய கால கடன் வைத்திருக்கும் விவசாயிகள் பயனடைவதோடு, அவர்களின் பயிர்க் கடன்களுக்கான தகுதியை மேம்படுத்துதல், புதிய பயிர்க் கடன்களைப் பெறுதல், விவசாயிகள் இடம்பெயர்வதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றையும் நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுகிறது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

விவசாயிகள் இத்திட்டத்தினை எளிதில் அணுகும் வகையில் பல அம்சங்களை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது. அதில் முக்கியமானது, இத்திட்டத்திற்காக ஒரு பிரத்யேக இணைய போர்டலை உருவாக்கியுள்ளது. ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு தகவல் உள்பட கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) கடன்களின் விவரங்களை வங்கிகள் கடன் தள்ளுபடி போர்ட்டலில் பதிவேற்றும்.

விண்ணப்ப செயல்முறை ஆன்லைனில் உள்ளது. விவசாயிகளுக்கு காகிதமற்ற மற்றும் தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்களுக்கு எளிதான அணுகலை வழங்க பொது சேவை மையங்கள் (CSC) மற்றும் வங்கிகள் விண்ணப்ப செயல்முறையை வழங்குகின்றன.

கடன் தள்ளுபடி அளவுகோல்கள்:

மார்ச் 31, 2020 வரை எடுக்கப்பட்ட நிலையான பயிர்க் கடன்களுக்கு இத்திட்டத்தில் ரூ.50,000 வரை நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்படும். கடன் திருப்பிச் செலுத்துதல் நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT- Direct Benefit Transfer) மூலம் நடத்தப்படும்.

தகுதி வரம்பு: கிரிஷி ரின் மாஃபி யோஜனாவின் பலன்களைப் பெற, விவசாயிகள் பின்வரும் தகுதித் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்

குடியிருப்பு: விண்ணப்பதாரர்கள் ஜார்கண்டில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும்.

கடன் வகை: கிசான் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி கடன் பெற்ற சிறு மற்றும் குறு விவசாயிகள் தகுதியுடையவர்கள்.

Read also: பத்மஸ்ரீ விருதா? தென்னை விவசாயி நரியாள் அம்மாவின் முதல் ரியாக்‌ஷன்!

சாகுபடி: விவசாயிகள் சுயமாக பயிரிடுபவர்களாகவோ அல்லது தனி நபர்களாகவோ குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களாக இருக்க வேண்டும்.

வயது: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

குடும்ப வரம்பு: ஒரு குடும்பத்திற்கு ஒரு விவசாயி மட்டுமே கடன் தள்ளுபடி செய்ய அனுமதிக்கப்படுவார்.

கடன் தேதி: மார்ச் 31, 2020க்கு முன் வங்கிகளில் கடன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எழுப்பும் குறைகளை தீர்க்க ஆன்லைன் போர்டலில் குறைதீர்ப்பு வசதியும் உள்ளது. இத்திட்டம், மற்ற மாநில விவசாயிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டமானது, மாநிலத்தின் விவசாயத் துறையின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளதாக ஜார்கண்ட் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Read also:

MANAGE: விதை- உரம்- பூச்சிக்கொல்லி விற்பனையாளர் கவனத்திற்கு!

மலட்டுத்தன்மை நோக்கி நகரும் மண் வளம்- என்ன செய்து காப்பாற்றலாம்?

English Summary: Jharkhand Waive Rs 50000 Farm loan Krishi Rin Mafi Yojana scheme gets attention Published on: 28 January 2024, 03:29 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.