காரைக்கால் மார்க்கெட் கமிட்டியில் தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ.நாம் -E-Naam) திட்டம் நேற்று துவக்கப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் (Kamalakannan) இத்திட்டத்தை துவக்கி வைத்தார். அபிவிருத்தி ஆணையர் மற்றும் வேளாண்துறை செயலர் அன்பரசு முன்னிலை வகித்தார். கலெக்டர் அர்ஜூன்சர்மா (Arjun Sharma) வரவேற்றார்.
திட்டத்தின் பயன்கள்
காரைக்கால் சந்தையில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான தரக்கட்டுப்பாட்டு கருவிகளான ஈரப்பதம் பார்க்கும் கருவி (Moisture Equipment), மூட்டை அடுக்கும் பலகைகள், தார்பாய், கைத்தெளிப்பான், மின்னணு எடை கருவி (Electronic Weight machine), கணினிகள் அடங்கிய அலுவலக பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. உழவர் நலத்துறை இயக்குநர் பாலகாந்தி, புதுச்சேரி வேளாண்மையத் துறை கூடுதல் வேளாண் இயக்குநர் ஜெயசங்கர், மாவட்ட கூடுதல் இயக்குநர் செந்தில்குமார், மார்க்கெட் கமிட்டி செயலர் கணேசன், வேளாண் விளை பொருள் உரிமம் பெற்ற வியாபாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கரும்பு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் எத்தனால் உயிரி உரம் உற்பத்தி!
வியாபாரிகள் மகிழ்ச்சி:
காரைக்காலில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தால், அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் போதிய வசதிகள் அனைத்தும், சந்தையிலேயே கிடைத்து விடும். வேளாண் துறை அமைச்சர் தொடங்கி வைத்த இத்திட்டம், அனைவருக்கும் பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முதல் முறையாக காப்பீடு!
வரும் 7 ஆம் தேதி முதல் பயிர் நிவாரணம்! பயிர் சேத பட்டியல் சரிபார்ப்பு!
Share your comments