எந்தத் தொழில் செய்தாலும், அதற்கான மரியாதையும், தர்மத்தையும் கடைப்பிடித்தால், வெற்றியடைவது உறுதி. இதனைத்தான் செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்.
அந்த வகையில், விவசாயிகள், மண்ணையும், மழையையும் இருகண்களாக பாவிக்கிறார்கள். குறிப்பாக இவை இரண்டும் கைகொடுக்காதபட்சத்தில், இழப்பை சரி செய்துகொள்ள வேளாண் தொழில் நுட்பப் பயிற்சிகள் பெரிதும் கைதுகொடுக்கும்.
அந்த வகையில், விவசாயிகள், மண்ணையும், மழையையும் இருகண்களாக பாவிப்பர். குறிப்பாக இவை இரண்டும் கைகொடுக்காத நேரத்தில், இழப்பை சரி செய்துகொள்ள வேளாண் தொழில் நுட்பப் பயிற்சிகள் பெரிதும் கைதுகொடுக்கும். அத்தகைய பயிற்சிகளை விவசாயிகளுக்கு வழங்குவதே ATMA (Agricultural Technology Management Agency) திட்டத்தின் முக்கிய இலக்கு.
அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது ஆகும்.
மேலும், அட்மா திட்டத்தின் வாயிலாக இதர துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.
அட்மா திட்டத்தில் வேளாண் தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்வணிகத்துறை,கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு துறை, பட்டுவளர்ச்சிதுறை போன்ற துறைகளில் உள்ள நவீன தொழில்நுட்ப விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு பல வகைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சுற்றுலா (Tour)
மேலும் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து அவ்வப்போது விவசாயிகளுக்கு பயிற்சி, கண்டுணர்தல் சுற்றுலா, செயல்விளக்கங்கள், பண்ணைப்பள்ளி மூலம் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுத்தர இந்த அட்மா திட்டம் உதவியாக இருக்கிறது.
ஆட்சியரே ஆட்சி மன்றத் தலைவர் (The Collector is the Chairman of the Board)
மாவட்ட அளவில், அட்மா ஆட்சி மன்ற தலைவராக மாவட்ட ஆட்சியரே செயல்படுவார். அவருக்கு ஒருங்கிணைப்பாளராக வேளாண் இணை இயக்குநர் இருப்பார்.
இந்த ஆட்சி மன்ற குழுவில் பல்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் முன்னோடி விவசாயி கள் உறுப்பினர் களாக செயல்படுவார்கள்.
வெளிமாநிலப் பயிற்சி (Other State training)
அட்மா திட்டம் மூலம் விவசாயிகள் வெளிமாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வெற்றியடைந்த தொழில் நுட்பங்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
இதேபோல், மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் சுற்றுலா அழைத்துச்சென்று அங்கு கடைப்பிடிக்கப்படும் சிறந்த தொழில்நுட்பங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன.
ரூ.10 ஆயிரம் பரிசு (Rs. 10,000 Award)
அட்மா திட்டத்தின்கீழ் சிறந்த விவசாயி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.
எனவே விவசாயிகள் தவறாமல், இந்த திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தொழில்நுட்பங்கள்க் கற்றுக்கொள்ளலாம்.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
டிராக்டருடன் கூடிய அறுவடை இயந்திரம்- விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் கிடைக்கும்!
துத்தநாக சத்துப் பற்றாக்குறையைப் போக்கும் ஜிங்க் சல்பேட்- விவசாயிகள் கவனத்திற்கு!
Share your comments