குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதார மூலங்களை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்த்திக்கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், திருப்பூரில் நடைபெற்ற 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' திருப்பூர் மண்டல மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் (TANCOIR)
தமிழ்நாட்டில் தேங்காய் மட்டையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் சுமார் 4500 நிறுவனங்கள், ஆண்டிற்கு சுமார் 8000 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இத்தோழில் மேலும் பன்மடங்கு அதிகரிக்க தேவையான வளங்களும், வாய்ப்புகளும் இங்கு உள்ளன என்பதனை அறிந்து, தமிழ்நாடு அரசு, 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், கயிறு வணிக வளர்ச்சிக்கென 5 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 'தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்' அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (TNCGS)
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நிதி வசதியினை பிணையமின்றி எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், ரூ.40 லட்சம் வரையுள்ள கடன்களுக்கு 90 விழுக்காடு உத்தரவாதமும், ரூ. 40 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கு 80 விழுக்காடு உத்தரவாதமும், ஒன்றிய அரசின் குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்துடன் CGTMSE இணைந்து தமிழ்நாடு அரசு அளிக்கிறது.
தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி செயல்முறை தளம் (TN TReDS)
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தொகையை மிகவும் காலதாமதமாக பெறும் சூழல் உள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கோடு முதற்கட்டமாக சட்டப்பூர்வ வாரியங்கள், மாநிலத்தின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றஉம் தலைமை கூட்டுறவு நிறுவனங்களை, ட்ரட்ஸ் (TReDS) எனப்படும் வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளங்களின் கீழ் கொண்டு வர தேவையான மென்பொருள் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளத்தினை (TN TReDS) முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
FaMe TN
குறைந்த வட்டியில் பிணையில்லா கடன் பெறுதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஏற்றுமதிக்கு தேவையான உதவிகளைச் செய்தல், விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், நவீன தொழில் நுட்பங்களை செயல்படுத்துதல், தொழிலாளர்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்தல், வரி மற்றும் தணிக்கை போன்றவற்றிற்கான வசதிகள் ஆகிய தேவைகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட M-TIPB (MSME - Trade and Investment Promotion Bureau) நிறுவனம் செயல்பட்டு வந்தது.
தொழில் முனைவோர்கள் தங்களது தொழிலில் முழுக்கவனத்தையும் செலுத்திடவும், அவர்களது தேவைகளை நிறைவேற்றிடவும் தமிழ்நாடு அரசால் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அம்மாநாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
மேலும் படிக்க
தாட்கோ மூலம் Medical Coding இலவச பயிற்சி, வேலை நிச்சயம்!
வேளாங்கண்ணி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 750 பேருந்துகள் இயக்கம்
Share your comments