திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் போதிய அளவு கையிருப்பு உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழர் பருவ காலங்கள் என்பது, பண்டைக்காலம் முதல் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பருவகாலப் பிரிவுகளைக் குறிக்கும். தமிழர்கள் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்தனர்.
கார்காலம்
இது தமிழ் மாதமான ஆவணி, புரட்டாசியை உள்ளடக்கியது.
குளிர்காலம்
இது தமிழ் மாதமான ஐப்பசி, கார்த்திகை யை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்.
முன்பனிக்காலம்
தமிழ் மாதமான மார்கழி, தையை உள்ளடக்கியது.
பின்பனிக்காலம்
இது தமிழ் மாதமான மாசி, பங்குனியை உள்ளடக்கியது.
இளவேனில்காலம்
இது தமிழ் மாதமான சித்திரை, வைகாசி யை உள்ளடக்கியது.
முதுவேனில்காலம்
இது தமிழ் மாதமான ஆனி, ஆடி யை உள்ளடக்கியது.
கார் பருவம் (Kar Season)
இதில் இலையுதிர் காலமான கார் பருவம் (Kar Season) வேளாண் வழக்கு கார் பட்டம் என்பது தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரிக்கு மிகவும்முக்கியமான ஒன்று.
இந்த பருவத்தில இங்குள்ள விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.
மே - ஜூன் (May - June)
அதாவது தமிழில் வைகாசி - ஆனி மாதங்களில் துவங்கும் இப்பருவம், ஆகஸ்ட் - செப்டம்பர் (ஆவணி - புரட்டாசி) மாதங்களில் முடிவடைகிறது.
120 நாட்கள் (120 days)
120 நாட்களைக் கொண்ட இந்த கார் பருவம், குறுகியகால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நெல் பயிரிட உகந்த பருவமாகக் கருதப்படுகிறது.
இதுத்தொடர்பாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இரா.கஜேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு (Water opening for cultivation)
திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
விதைகள் கையிருப்பு (Seed stock)
இதன் அடிப்படையில் விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாகுபடிக்குத் தேவையான விதைகள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
20கிலோ விதைகள்
மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் விதைக் கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 கிலோ விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
நெல் ரகங்கள் (Paddy varieties)
வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் அம்பை-16, டிபிஎஸ்-5, ஏடிடி45 விதைகள் போதுமான அளவு இருப்பு உள்ளது.
எனவே, தேவைப்படும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளைப் பெற்று பயனடையலாம் . இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments