1. வாழ்வும் நலமும்

3 நாள் இலவச யோகா பயிற்சி- வீட்டில் இருந்தபடியே பங்கேற்க ஈஷா ஏற்பாடு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
3 day free yoga class - Isha arranges to participate at home!

உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைக்கும் யோகாவை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்து கொடுக்கிறது.

யோகாவின் சிறப்பு (The specialty of yoga)

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. யோகா செய்வதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக நீரழிவு, மலச்சிக்கல் போன்ற நோய்களை எதிர்த்துப் போராடவும் யோகா உதவுகிறது. மன அமைதி மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்கு யோகா மற்றும் தியானம் அவசியம் என்று கருதப்படுகிறது.

இளமையாக இருக்க (To be young)

உடலை நெகிழ வைப்பதற்காக மட்டுமே யோகா செய்யப்படுகிறது என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. மாறாக, யோகாவின் பல ஆசனங்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன. யோகாவின் உதவியுடன், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.

ஈஷா ஏற்பாடு (Arranged by Isha)

அந்த வகையில், பொதுமக்கள் அனைவரும் பலனடையும் வகையில் ஆன்மீகக் குரு ஜக்கி வாசுதேவ்வின் ஈஷா அறக்கட்டளை யோகாசனப் பயிற்சி அளித்து வருகிறது.

3 நாட்கள் (3 days)

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த சவாலான காலத்தில் ஈஷா சார்பில் உயிர் நோக்கம் என்ற யோகா வகுப்பு ஆன்லைன் வாயிலாக ஜூலை 23-ம் தேதி முதல் ஜூலை 25-ம் தேதி வரை இலவசமாக நடத்தப்பட உள்ளது.

2 மணி நேரம் (2 hours)

காலை 6.30 முதல் 8.30 மணி வரை, மதியம் 11 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை என 3 வேளைகளில் இவ்வகுப்பு தினமும் 2 மணி நேரம் நடக்கும். பங்கேற்பாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதில் ஏதேனும் ஒரு நேரத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

யோகா பயிற்சி (Yoga practice)

12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம். இதில் கற்பிக்கப்படும் யோகா பயிற்சிகளை தினமும் செய்து வருவதன் மூலம் முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம், மன அழுத்தம் குறையும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

முன்பதிவு (Booking)

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் isha.co/Uyirnokkam என்ற இணைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய உதவி தேவையெனில் 7383673836 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்யலாம். முன்பதிவு ஜூலை 21-ம் தேதி மதியம் 12 மணியுடன் நிறைவு பெறுகிறது.

ஆனந்த சங்கமம் (Ananda Sangamam)

நிறைவு நிகழ்ச்சியாக ஜூலை 25-ம் தேதி இரவு 7 மணிக்கு தமிழில், சத்குருவுடன் ஆனந்த சங்கமம் நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறும். இதில் அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க...

கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!

2020 ஆம் ஆண்டில் 4-இல் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: யுனிசெப் தகவல்

English Summary: 3 day free yoga class - Isha arranges to participate at home! Published on: 21 July 2021, 07:48 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.