ஆரோக்கியம் என்று வரும்போது, அதில் மாறுபட்டத் தகவல்களை நம்மைத் தவறாமல் வந்தடைகின்றன. அப்படி, முந்திரி என்பது, பணக்காரர்களுக்கானது என்றும், தினமும் முந்திரி சாப்பிட்டால், உடல் எடை கூடும் என்றெல்லாம் பலவிதக் கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. முக்கியத்துவம் பெரும் உணவுப்பொருள் முந்திரி பருப்பு. மிதவெப்ப மண்டல காலநிலையில் அதிகம் வளரும் இந்த முந்திரி பருப்பு உலகம் முழுவதும் பரவலாக கிடைக்கிறது.
ஊட்டச்சத்து
இந்த சிறிய பருப்பு ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாகத் திகழ்கிறது. பெரும்பாலும் இந்திய இனிப்புகள் மற்றும் பாரம்பரிய தயாரிப்புகளில் சுவையை அதிகரிக்க முந்திரி பருப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. முந்திரியின் ப்யூரி ஒரு தனித்துவமான சுவையுடன் கூடிய தடித்த மற்றும் கிரீமி கிரேவிகளை தயாரிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளிலும் முந்திரி பருப்பு பெரும் பிரபலம்.எனவே னமும் முந்திரி பருப்புகளை உட்கொள்வதன் சில அற்புதமான நன்மைகளைப் பெற முடியும்.
இதய ஆரோக்கியம்
முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்பு இருப்பதால், அது ஆரோக்கியமான இதயத்திற்கு நன்மை தரும். கொலஸ்ட்ரால் இல்லாதது மற்றும் இதய செயல்பாட்டை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
புற்றுநோய்
முந்திரி பருப்புகளை சாப்பிடுவதன் முக்கிய நன்மைகளில் ஒன்று, இது புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. புரோந்தோசயனிடின்கள் என்பது ஒரு வகை ஃபிளாவனால் உள்ளது. இது கட்டி செல்கள் வளரவிடாமல் தடுக்கிறது. முந்திரி பருப்பு செம்பு மற்றும் புரோந்தோசயனிடின்கள் நிறைந்துள்ளன, இவை புற்றுநோயைத் தடுக்கும்.
சரும பராமரிப்பு
முந்திரியில் தாமிரம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இது உங்கள் சருமத்தை பொலிவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயதான அறிகுறிகளைக் குறைப்பதாக அறியப்படுகிறது, மேலும் தாமிரம் மற்ற நொதிகளுடன் சேர்ந்து கொலாஜனை உருவாக்குகிறது, இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.
நல்லக் கொழுப்பு
முந்திரியில் நல்லக் கொழுப்புகள் உள்ளன, அவை ஆரோக்கியமான உடலுக்கு ஏற்றதாக பரிந்துரைக்கப்படுகிறது. முந்திரி பருப்பில் உள்ள கொழுப்பு, நல்ல கொழுப்பின் வளர்ச்சிக்கும், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கும் காரணமாகும். அதிக ஆற்றலைத் தருவதோடு, நீண்ட நேரம் உங்களை மனநிறைவுடன் வைத்திருக்கும். எனவே, சரியான எடையுடன் இருக்க தினமும் 3-4 முந்திரி பருப்புகளை உட்கொள்ளலாம்.
வயிற்று நோய்
தினமும் முந்திரி சாப்பிடுவது வயிற்று நோய்களில் இருந்து உங்களை காப்பாற்றுவதோடு செரிமானத்திற்கும் உதவுகிறது. வயிற்றை உறுதிப்படுத்த தினமும் இரண்டு-மூன்று முந்திரி பருப்புகளை சாப்பிடுவது நல்லது.
இதில் அதிக அளவு லுடீன் மற்றும் பிற முக்கிய ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால், நம் கண்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றன. இது ஆரோக்கியமான கண்பார்வையையும் உறுதி செய்கிறது.
மேலும் படிக்க...
சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!
வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!
Share your comments