மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்கிறது. இதில் ஒரு உறுப்புக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும், நம்மால் இயல்பாக இருக்க முடியாது. அவ்வகையில், மனிதர்களுக்கு கண்கள் மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த கண்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் வாழ்வில் பல சிக்கல்கள் ஏற்பட வழிவகுக்கும். அவற்றில் மயோகிமியா, பிளெபரோஸ்பாஸ்ம் மற்றும் ஹெமிஃபேஷியல் துடிப்பு போன்றவை அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது. இது போன்ற பல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, கண்களுக்குத் தேவையான ஓய்வை அளிப்பதோடு, காய்கறிகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கண்கள் பாதுகாப்பு
ஒவ்வொரு மனிதனுக்கும் பார்வைத் திறன் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவருமே அறிவர். பார்வைத் திறனில் பிரச்சனை இருந்தால், அது நம் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும். அனைத்து உடல் உறுப்புகளுக்கும் ஓய்வு என்பது அவசியம் தேவை. அவ்வகையில், தினசரி குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்குவது கண்களுக்கு சிறப்பான ஓய்வைத் தரும். மேலும், கண் ஆரோக்கியமும் மேம்படும். அவ்வப்போது குளிர்ந்த நீரால் கண்களை மெதுவாக கழுவுவதும், கண்களுக்கு நல்லது தான். இவ்வளவு சிறப்புகள் பொருந்திய கண்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்
தினந்தோறும் உங்களுடைய தலையை அசைக்காமல், எதிரில் இருக்கும் வெள்ளையான சுவரைப் பார்த்தால் போல், கண்களைச் சுற்றி 8 போட வேண்டும். இவ்வாறு 5 முறை செய்வதனால் பார்வைப் பிரச்சனைகள் குணமடையும்.
ஒரு மண்டலம் எனும் அடிப்படையில் சுமார் 48 நாட்களுக்கு, வைட்டமின் ஏ நிறைந்துள்ள காய்கறிகளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதனால் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உண்டாகும் பார்வை குறைப்பாட்டை குறைக்க முடியும்.
கண்களை அசைக்க கஷ்டப்படும் நபர்கள் கருவிழியை மட்டும், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இது ஒரு பயிற்சி தான். இவ்வாறு செய்தனால் பார்க்கும் போது கண்கள் வலிக்காது.
அதிக வௌிச்சத்தை நம் கண்கள் பார்க்கும் போது உண்டாகும் அழுத்தத்தை ப்ரோக்கோலி சரி செய்கிறது. ஏனெனில், இதில் வைட்டமின் பி ஊட்டச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கை ஏதேனும் ஒரு முறையில் சமைத்து, அடிக்கடி சாப்பிட வேண்டும். இதில் அதிகளவில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து இருப்பதனால் கண்களைப் பாதுகாக்கிறது.
மேலும் படிக்க:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 ! ஜூன் 3ல் தொடங்க திட்டம்!
Share your comments