கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய ஆய்வில் அதிரடியாக சிக்கின.
வியாபாரிகள் சிலர், வணிக நோக்கில் லாபம் ஈட்டுவ்தற்காக, உடல்நலததிற்கு கேடு விளைவிக்கும் பழங்களை விற்பனை செய்வது அவ்வப்போது வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது.
திடீர் ஆய்வு
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில், கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழ விற்பனையகத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
8 டன் பழங்கள்
அப்போது உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து ரசாயன பொடி கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 கடைகளிலிருந்து சுமார் 7டன் மாம்பழங்கள் மற்றும் 1டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை கிருமிநாசினி ஊற்றி அழித்தனர்.
அதிர்ச்சி
ரசாயன பொடி கலந்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!
Share your comments