மூங்கில் அரிசி பற்றி உங்களுக்கு தெரியுமா? வெகு சிலரே கேள்விப் பட்டிருப்போம். விரல் விட்டு எண்ணும் அளவில் சுவைத்திருப்போம். மறந்து போன பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள். பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றிய காலத்தில் இல்லாத நோய்கள் எல்லாம் தற்போது அனைத்து தலைமுறையினரிடமும் இருப்பது வேதனை தான்.
குறிஞ்சி இன மக்கள், பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் அவர்களின் உணவு முறை தான். தேன், தினை மாவு, மூங்கில் அரிசி என்பனவாகும். இதில் மூங்கிலரிசி என்பது வெகு எளிதில் கிடைப்பது அல்ல. 60 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும், மூங்கில் பூவிற்குள் இந்த அரிசி இருக்கும். கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காத்திருக்க வேண்டும். அதன் ஆயுள் நிறைவடையும் போது தான் இவ்வரிசி நமக்கு கிடைக்கும். அதனால் தான் ஏனோ இதில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளன.
ஒரு கப் மூங்கில் அரிசில் உள்ள சத்துக்கள்
கலோரி - 160
கார்போஹைட்ரேட்ஸ் - 34 கிராம்
புரதசத்து - 3 கிராம்
கொழுப்பு சத்து - 0%
காடுகளில் வாழ்ந்த மக்களின் உடல் ஊக்கத்திற்கு முக்கிய காரணம் இந்த மூங்கில் அரிசி தான். அக்காலத்தில் பழங்குடியினர் உணவிற்காகவும், உறைவிடத்திற்காகவும் பல மைல் தூரங்கள் பயணிப்பார்கள். பிள்ளை செல்வத்திற்கும் குறைவிருக்காது. மன நிறைவோடு வாழ்ந்தார்கள். நன்கு யோசித்து பார்த்தால் அதில் ஒளிந்திருக்கும் ரகசியம் புரியும். அவர்கள் என்றுமே மூட்டு வலி, வாத நோய், குழந்தையின்மை, சர்க்கரை வியாதி என எதுவும் சந்தித்ததில்லை.
மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்
- உடலில் உள்ள வாத, பித்த, கபம் போன்றவைகளை சரி செய்து உடலை சமன் நிலையில் வைக்கும். மேலும் உடலில் சேரும் கழிவுகள், நச்சுக்களை சிறுநீர் வழியே வெளியேற்றிகிறது.
- மூங்கில் அரிசியை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்வதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
- மெக்னிசியம் , காப்பர் , ஜிங்க் , தையமின் , ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கி இருப்பதால் உடலில் உள்ள ஊளைச் சதைகளைக் குறைக்கும். வெகு நேரத்திற்கு பசி எடுக்காது, அதே சமயத்தில் உடலின் ஆற்றலும் குறையாது.
- பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் தீர்ந்து, குழந்தையின்மைக்கு தீர்வாகிறது.
- உடலுக்கு உறுதி அளிப்பதுடன் அதிக சுறுசுறுப்புடன் உடல் உறுப்புகள் செயல்படவும் செய்கிறது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments