1. வாழ்வும் நலமும்

கருப்பு பூஞ்சை தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

ரத்த சர்க்கரை அளவை எப்போதும் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று நீரிழிவு நோயாளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை தொற்று

கருப்பு பூஞ்சை தொற்று என்பது புதிய நோய் ஒன்றும் கிடையாது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பிருந்தே இத்தகைய தொற்றுகள் உள்ளன. அவற்றின் அளவு மிகவும் குறைவாக இருந்தது. தற்போது, கொரோனா காரணமாக, இந்த அரிதான ஆனால் கொடிதான பூஞ்சை தொற்று குறித்து அதிக அளவில் பேசப்படுகிறது.

அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை தொற்று குறித்து கடந்த வாரம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா, "ரத்த சர்க்கரையின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு முன்பெல்லாம் அதிகமாக கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது.

கீமோதெரபி மேற்கொள்ளும் புற்றுநோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வோரிடமும் இது காணப்பட்டது. ஆனால், கொரோனா மற்றும் அதன் சிகிச்சை முறையின் காரணமாக, அதிக அளவிலான பாதிப்புகள் தற்போது ஏற்பட்டு வருகின்றன என்றார்.

பூஞ்சைகள் எங்கு காணப்படுகின்றன?

காற்று, தண்ணீர் மற்றும் உணவில் கூட இவை இயற்கையாக காணப்படுகின்றன. காற்று மூலம் உடலுக்குள் நுழையும் இது, தோலில் ஏற்படும் வெட்டு, தீ புண் அல்லது காயத்தின் மூலமாக கூட உடலுக்குள் நுழையும்.

இந்தச் தொற்றை விரைவில் கண்டறிவதன் மூலம் பார்வை குறைபாடு அல்லது மூளை குறைபாட்டை தவிர்க்க முடியும்.

இதர தடுப்பு முறைகள் பின்வருமாறு

ஆக்சிஜன் செறிவூட்டிகளை பயன்படுத்துவோர் ஈரப்பதமூட்டியை நன்றாக தூய்மை செய்து தேவைப்பட்டால் அதை மாற்ற வேண்டும்.
ஈரப்பதமூட்டி குப்பிகளில் நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற சாதாரண சலைன் திரவத்தை பயன்படுத்த வேண்டும் மற்றும் தினசரி மாற்ற வேண்டும்.

முகக் கவசங்களை தினமும் தூய்மைப்படுத்த வேண்டும்.

சிறு அறிகுறிகளை கூட தவறவிட வேண்டாம்

கண்கள் மற்றும் மூக்கை சுற்றி வலி மற்றும் சிவந்துப்போதல், காய்ச்சல் மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், சுவாசக் குறைபாடு, தலைவலி, இருமல், மூச்சு விடுவதற்கு சிரமம், ரத்தவாந்தி, மாறும் மனநிலை மற்றும் பார்வை குறைபாடு.

மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பொறுப்புகள்

கொரோனா நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பும் போது, முகத்தில் வலி, அழுத்தம், ரத்த போக்கு, பல் ஆடுதல், நெஞ்சு வலி மற்றும் சுவாசக் குறைபாடு போன்ற கருப்பு பூஞ்சையின் ஆரம்பகால அறிகுறிகள் குறித்து அறிவுறுத்தலவேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க....

கொரோனா நிவாரண தொகையின் 2வது தவணை ஜூன் 3-ந் தேதிக்குள் வழங்கப்படும்!! 

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு வரும் பூஞ்சை தொற்று! பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இனி வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்: தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி!!

English Summary: Always monitor and control blood sugar level, Advice for Diabetes Patients Published on: 22 May 2021, 08:17 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.