நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாகவும், உடல் வெப்பத்தை தணிக்க கூடியதாகவும் விளங்க கூடிய வெள்ளரிக்காய் வெயில் காலங்களில் அதிகம் காணப்படுகிறது. இது உலகில் அதிகம் விளையும் காய்கறிகளில் நான்காம் இடத்தை வகிக்கிறது. இதில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால், வெயில் காலங்களில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிப்பதுடன், சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கும்.
அள்ளி கொடுக்கும் அத்தியாவசியமான வைட்டமின்கள்
வெள்ளரிக்காயில் பல்வேறு வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இதனை சாப்பிடுவதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி இவற்றை தருகிறது. வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடும் போது அதன் தோளில் உள்ள வைட்டமின் சி முழுமையாக கிடைக்கிது. அதுமட்டுமல்லாது இதனை கீரை மற்றும் கேரட்டுடன் சேர்த்து ஜூஸ் போல பருகலாம்.
மருத்துவ குணங்கள் நிறைந்த வெள்ளரிக்காய்
- வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டேரோல் (sterols)என்ற பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறையச் செய்யும்.
- வெள்ளரிக்காய் சாறு ஈறுகளில் இருக்கும் நோய்களை குணப்படுத்தும். மேலும் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்குமாறு செயல்படுகிறது.
- வெள்ளரியில் உள்ள சல்பரும், சிலிகாவும் முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கிறது. தசைகளின் இணைப்புகளை திடமாக்கி மூட்டுக்களுக்கு ஆரோக்கியக்கியத்தை அளிக்கிறது.
- மேலும், இதிலுள்ள சிலிகா என்ற அற்புதமான கனிமம் உள்ளதால், அவை நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்கும்.
- வெள்ளரிக்காயை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீழ் வாதத்திற்கு நிவாரணம் கிடைக்கிறது.
- வெள்ளரியை சருமத்தில் தடவுவதன் மூலம், சூர்ய கதிர்களில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பளிக்கிறது.
- உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைப்பதால் இது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
- வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துகள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.
- கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் சில வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி, கல்லீரல் பலம் பெறும்.
- வெள்ளரியில் உள்ள சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வான மாதவிடாயின் பொழுது, உதிரப்போக்கு அதிகம் இருக்கும் நிலையில், சத்துக்கள் குறைந்து மிகவும் சோர்வு ஏற்படும். அச்சமையத்தில் வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிட்டால் பெண்களின் மாதவிடாய் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்குகிறது.
- சிலருக்கு அளவுக்கு அதிகமாக பசியுணர்வு ஏற்பட்டு, அதிகம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க நேரிடுகிறது. இதிலிருந்து விடுபட அதிகம் வெள்ளரிக்காய்களை சாப்பிட்டால் அதீத பசியுணர்வு ஏற்படாமல் நம்மை காக்குகிறது.
M.Nivetha
nnivi316@gmail.com
Share your comments