விநாயகர் சதுர்த்தி சமயங்களில் மட்டும் அதிக பேரால் நாடப்படும் மலர் எருக்கன். விநாயகருக்கு பிடித்த மலர் என்பதால் என்னவோ நாம் விநாயகர் சதுர்த்தி சமயங்களில் பூஜைக்கு பயன்படுத்துகிறோம். மற்ற சமயங்களில் எருக்கின் அருகே கூட செல்வதில்லை. பாரம்பரிய மருத்துவத்திலும், பாட்டி வைத்தியத்திலும் இதற்கு தனி இடமுண்டு.
எருக்கின் செடியின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வளமற்ற, பராமரிக்கப்படாத நிலங்கள், வயல்கள் சாலையோரங்கள் போன்ற இடங்களில் வளரும் தன்மை கொண்டது.பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும் நிலைத்து வளர கூடிய ஆற்றல் கொண்டது. பொதுவாக விதைகள் மனிதர்கள், பறவைகள், விலங்குள் மூலம் பரவுகிறது. ஆனால் எருக்கு மட்டும் யாருடைய உதவியும் இல்லாமல் தனித்து அதன் இனத்தை தானே பெருக்கி கொள்கிறது.
எருக்கஞ் செடியில் 2 வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நீல நிறத்திலும் மற்றொன்று வெள்ளை நிறத்திலும் பூக்கும். விநாயகருக்கு பூஜிக்க உகந்ததாகவும், அரிதாகவும் கிடைக்க கூடிய வெள்ளை பூ செடிக்கு தான் அதிக மவுசு உள்ளது. அந்த செடியை சில வீடுகளில் தெய்வத்திற்கு இணையாக துளசி செடியை வளர்ப்பது போல வெள்ளை எருக்கஞ் செடியை வீட்டின் முன்பு வைத்து வளர்க்கிறார்கள். இந்து சமயத்தில் இந்த செடியானது அதிஷ்டத்தை தர வல்லது எனவும், தீய சக்திகளிடமிருந்து வீட்டை பாதுகாக்கும் எனவும் நம்ப படுகிறது.
எருக்கம் செடியின் பயன்கள்
எருக்கம் பூ, பூஜிக்க உகந்தது
"நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா”
நல்லதோ, கெட்டதோ எருக்கம் பூவை உள்ளன்போடு கொடுத்தாலும் கடவுள் வேண்டாம் என்று கூறாமல் ஏற்று கொள்வர் என 2000 ஆண்டுகளாக முன்பே கபிலர் சொல்லி இருக்கிறார்.
எருக்கம்பால்
“எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும் வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர" – செருக்கான
சங்க இலக்கியங்களில் எருக்கம்பால் பற்றிய குறிப்புகள் உள்ளன. பண்டைய காலங்களில் காலில் முள் தைத்தால், இந்த எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடங்களில் விடும் போது வலி குறைவதுடன், குத்திய முள் வெளியே வந்துவிடும்.
எருக்கன் இலை
பழுத்த எருக்கன் இலையை குதிகால் வீக்கத்தின் மீது வைத்து சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து ஒத்தடம் கொடுத்து வர குதிகால் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
எருக்கன் இலைச்சாறு
எருக்கன் செடியின் இலைச்சாறு தோல் பிரச்சனைகளின் மீது விரைந்து செயல்படும். எருக்கன் இலைச்சாறுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து, கடுகு எண்ணெய்யில் காய்ச்சி படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மேல் தடவினால் விரைவில் நிவரணம் பெறலாம்.
எருக்கன் வேர்
எருக்கன் வேரை கரியாக்கி விளகெண்ணெய் கலந்து வெளிப்புற பயன்பாட்டிற்கு படுத்தலாம். கரப்பான் கடி, பால்வினை நோய்ப் புண்கள் என ஆறாத காயங்கள் மீது தடவிவர விரைவில் குணமாகும்.
எருக்கன் பஞ்சு
பண்டைத் தமிழர்கள், இலவம்பஞ்சு தலையணை பயன் படுத்தி தூங்கினார்கள். வாங்க இயலாதவர்கள் எருக்குக் காயிலுள்ள பஞ்சுதான் தலையணை தயாரிக்க பயன் படுத்தினார்கள்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments