விருந்தோம்பல் என்பதுதான் தமிழரின் மரபு. இதிகாசக் கதைகளில் வரும் காட்சிகள், தற்போது நடைமுறையிலும் சாத்தியமா? ஆம், சாத்தியமாக்கியிருக்கின்றனர் இந்த டாக்டர் தம்பதியினர். அவர்கள் தங்கள் வீட்டில், பசியோடு வரும் , யார் வேண்டுமானாலும், தங்களுக்குப் பிடித்த உணவை, தங்கள் கையாலேயே சமைத்துச் சாப்பிட்டு செல்ல வசதி ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த வீட்டில் ஒருபோதும், எந்த பொருளும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார்கள்.
டாக்டர் சூரிய பிரகாஷ் விஞ்சமூரி - டாக்டர் காமேஸ்வரி தம்பதி, இந்த சேவை குறித்து கூறியதாவது.:-
ஒரு நாள் காலை, 11:30 மணி இருக்கும். பசியோடு ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். உணவு சமைத்து பரிமாறினோம். வேக வேகமாக அந்த உணவை வாயில் போட்டு, தட்டில் இருந்தவற்றை, ஒரு சில நிமிடங்களில் காலி செய்து விட்டார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. ஏன் சார் அழுகிறீர்கள் என்றோம். 'சாப்பிட்டு, இரண்டு நாட்கள் ஆகி விட்டன' என்று கூறி, சாப்பிடாமல் இருந்ததற்கான காரணத்தையும் கூறினார்.
அந்தரி இல்லு
அப்போது தான் எங்கள் மனதில், இந்த வீடு பற்றிய எண்ணம் உதித்தது. அதுபோல, தேவைப்படுபவர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும், தங்கியிருந்து சாப்பிடவும் செய்யலாம் என நினைத்து, 2006ல், தெலங்கானா மாநிலம், ஐதராபாத், கொத்த பேட்டையில், இந்த வீட்டை உருவாக்கினோம். தயாராக வைத்திருக்கும் சாப்பாட்டை எடுத்து, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
அது மட்டுமின்றி, இங்கு இருக்கும் உடைகளையும் எடுத்து அணிந்து கொள்ளலாம். இந்த இல்லத்தின் பெயர், அந்தரி இல்லு காலை, 5:00 மணியிலிருந்து, நள்ளிரவு, 12:00 மணி வரை, யார் வேண்டுமானாலும் இங்கு வந்து சாப்பிட்டு செல்லலாம், இல்லம் திறந்திருக்கும்.
கிளைகள்
எங்கள் வருமானத்தில் இருந்து மட்டுமே இந்த வீட்டை நடத்துகிறோம். பல லட்சம் பேரின் பசியை போக்கியுள்ள இந்த வீடு, எங்களுக்கு பிறகும் இயங்கவும் ஏற்பாடு செய்திருக்கிறோம். பல இடங்களில், இதுபோன்ற இல்லங்களை திறக்கும் ஆசையும் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!
வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!
Share your comments