நம் தாத்தா பாட்டி காலத்தில் வேப்பங்குச்சியை கொண்டு பல் துலக்கினார்கள். அதனால் பற்கள் சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் எளிதில் வராது. ஆனால் இன்றய நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இந்த பற்கள் சம்பத்தப்பட்ட பிரச்சனை உள்ளது. பற்களில் ஏற்படும் பிரச்சனை வீக்கம், வலி, கூச்சம், சொத்தை ரத்த கசிவு இவைகளை அலட்சியப்படுத்தாமல் உடனடி சிகிச்சை மேற்கொள்வதுதான் சால சிறந்தது.
பற்கள் சம்பத்தை பட்ட பிரச்சனையில் மிக முக்கியமானது பல் சொத்தை. இது சிறியதாக ஆரம்பித்தாலும் முடிவில் பெரும் விளைவை ஏற்படுத்தி விடுகிறது. பற்களில் சொத்தை ஏற்படும் போது கடுகின் அளவை விட சிறியதாக தெரியும், ஆனால் அது கடைசியில் பற்களை மெது மெதுவாக அரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
பல் சொத்தையை விரட்டி அடிக்க
எந்த ஒரு இனிப்பு (Sweet) பொருளும் சாப்பிட்ட பிறகு நன்றாக வாயையே கொப்பளிக்க வேண்டும். இதை முறையாக செய்து வந்தால் பல்சொத்தையை வராமல் தடுக்கலாம். பல்சொத்தையை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிய முறையில் வைத்தியம் (Treatment) பார்க்கலாம்.
பல்சொத்தையை சரி செய்ய வீட்டு வைத்தியம்
நல்லெண்ணெய்
காலையில் தினமும் 10 மில்லி நல்லெண்ணெய் கொண்டு நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் (Bacteria) அழிந்து வாய் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைக்கிறது.
உப்பு
தினமும் காலையில் பல்துலக்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு (Salt) சேர்த்து கொப்பளித்து வர பற்கள் சொத்தையை தடுக்கலாம். காலையில் இந்த முறையை செய்ய முடியவில்லை என்றால் தினமும் மூன்று வேலை சாப்பிடுவதற்கு முன்பும் செய்யலாம்.
பூண்டு (Garlic)
- மூன்று பல் பூண்டை (Garlic) நன்கு இடித்து உப்பில் தேய்த்தெடுத்து சொத்தை பல்லின் மேல் 10 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் சொத்தை பல்லில் உள்ள பூச்சிகள் அளிக்கப்பட்டு பாக்டிரீயாக்கள் நீங்கி நாளடைவில் சொத்தை பல் சரியாகிவிடும்.
- ஒரு பல் பூண்டை பாறை உப்பில் (இந்து உப்பு) தேய்த்தெடுத்து பூச்சிகள் (Pest) உள்ள பற்களில் வைக்கவும். பின் இரண்டு நிமிடத்திற்கு பிறகு அதனை நன்கு மென்று விழுங்கவும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால் பற்களில் உள்ள சொத்தை சிறிது சிறிதாக குறைந்து விடும்.
மஞ்சள் தூள்
சொத்தை பற்களின் மேல் மஞ்சள் (Turmeric) தூளை 5 நிமிடம் நன்கு தேய்த்து பின் வெதுவெதுப்பான நீரில் கொப்பளித்து வந்தால் நாளடைவில் சொத்தை பல் பிரச்சனை நீங்கி விடும் .
பெருங்காயம்
பெருங்காயத்தை தூளாக்கி அதை நீரில் கொதிக்க வைத்து பின் அதனை மிதமான சூட்டில் அல்லது ஆறிய பிறகு நன்கு கொப்பளிக்க வேண்டும். உங்கள் பற்கள் சிதைவடைந்திருந்தாலோ அல்லது பற்களில் அதிக பூச்சி இருந்தாலோ பெருங்காயத்தை பற்களின் மேல் வைக்கவும். இவ்வாறு செய்தால் பற்களில் உள்ள பூச்சிகளை அழித்து வெளியேற்ற உதவுகிறது.
ஜாதிக்காய் எண்ணெய்
ஜாதிக்காய் எண்ணெய் பல் சொத்தைக்கு மிக சிறந்தது. சிறிய பஞ்சை இந்த எண்ணெயில் நனைத்து வலி எடுக்கும் பற்களின் மேல் வைக்கவும். பின் 5 நிமிடத்தில் இந்த எண்ணெய் பற்களில் உள்ள பூச்சிகளை (Pest) அழித்து விடுகிறது. பின் மிதமான தண்ணீரில் வாயை கொப்பளிக்க பற்களில் உள்ள பூச்சிகள் வெளியேறும் மற்றும் பல் வலி குறைந்து விடும்.
கோதுமை ஜோவர் (கோதுமை புள்)
கோதுமையின் (Wheat) புள் பற்களில் அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த ஆயுர்வேத மருந்தாக (Ayurvedic medicin) விளங்குகிறது. பற்களில் வலி, வீக்கம், கூச்சம் ஏற்படும் போது இந்த புள்ளை நன்கு மெல்ல வேண்டும். இது பற்களில் உள்ள பூச்சை அளித்து வழியை குறைகிறது.
K.Sakthipriya
Krishi Jagran
மேலும் படிக்க
சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக நச்சுன்னு 4 டிப்ஸ!
பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு! மேலும் பல பயன்கள் அறிவோம்
Share your comments