பெங்களுருவில் புதிதாக இட்லி வழங்கும் ATM இயந்திரத்தை ஒரு உணவு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் நாம் ATM மூலம் பணம் எடுப்பதுபோலவே இட்லி, தோசை போன்றவற்றை பெறமுடியும்.
இந்த இயந்திரம் ‘Freshot Robotics’ எனும் ஸ்டார்ட்டப் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு ஆகும். 24 மணிநேரமும் இட்லி கிடைக்கவேண்டும் என்றால் 24 மணிநேரமும் இட்லி தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்குவதே ஒரே தீர்வு என்று அந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தியாவின் ‘Silicon Valley’ என்று அழைக்கப்படும் டெக்னாலஜி தலைநகரமான பெங்களுருவில் புதிதாக இட்லி, தோசை போன்றவற்றை 24 மணிநேரமும் வழங்கும் ATM இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இட்லி இயந்திரம்
‘Freshot Robotics’ எனும் ஸ்டார்ட்டப் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு ஆகும். இந்த இயந்திரம் இட்லி தயாரித்து சிறப்பாக பேக்கிங் செய்து தருகிறது. இந்த இயந்திரம் வைக்கப்பட்டதற்கு மிகமுக்கிய காரணம் வாடிகையளர்களுக்கு நேரடியாக அனுபவம் கிடைக்கும். இது முழுவதும் ஆட்டோமேட்டிக் முறையில் தயாரிக்கப்படுகின்றது.
மகளுக்காக
இதனை உருவாக்க முக்கிய காரணம் கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைவர் சரண் ஹிரேமத் அவரின் உடல் நிலை சரியில்லாத அவரின் மகளுக்கு இட்லி வாங்க நகர் முழுவதும் அலைந்திருக்கிறார். அப்படி அலைந்தும் அவருக்கு எங்கும் இட்லி கிடைக்கவில்லை. இதன் காரணமாகே தற்போது இந்த இட்லி தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த இயந்திரம் பெங்களூரு நகரில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.விரைவில் இந்த இயந்திரம் நகரங்களில் பல அலுவலகங்கள், ரயில் நிலையம், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் அமைக்கவுள்ளது. இதே இயந்திரங்களில் இருந்து தோசை, அரிசி உணவுகள், பழச்சாறுகள் போன்றவற்றை வழங்கவும் முடிவெடுத்துள்ளது.
மேலும் படிக்க...
மாத சம்பளதாரர்களுக்கு விரைவில் ரூ.81,000 - மத்திய அரசு அறிவிப்பு!
Share your comments