உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பருப்பு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பாதாம் பருப்பு. ஏனெனில், இதனை தினமும் எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைக்கும் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை.
எலும்புகளுக்கு பலம் (Strength to the bones)
பாதாம் பாலானது நமது தினசரி கால்சியத் தேவையில் 30 சதவீதத்தையும், வைட்டமின் டி தேவையில் 25 சதவீதத்தையும் பூர்த்தி செய்கிறது.
மேற்கூறிய இரண்டும் ஒன்றாகச் செயல்பட்டு எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலிமையைச் சேர்க்கிறது. இதனால் கீல்வாதம், ஆஸ்டியோபோரோஸிஸ் உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான நோய்களும் தடை செய்யப்படுகின்றன.
தசைகளின் ஆரோக்கியம் (Muscle health)
பாதாம் பாலில் உள்ள வைட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்) மற்றும் இரும்புச்சத்து ஆகியவை தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அவற்றை வலுவாக்கவும் செய்கின்றன.
சருமப் பாதுகாப்பு (For skin care)
பாதாம் பாலானது நமது தினசரி வைட்டமின் இ தேவையில் 50 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. பாதாம் பாலில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் இ ஆகியவை சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கின்றது.
இதனைக் கொண்டு சருமத்தை அலசும்போது சருமம் பளபளப்பாகிறது. பளபளப்பான ஆரோக்கியமான பன்னீர் மற்றும் பாதாம் பாலிலைக் கொண்டு சருமத்தை அலச வேண்டும்.
சிறுநீரக ஆரோக்கியம் (Kidney health)
கால்சியம் மற்றும் பொட்டாசியம் தனிமங்களின் அளவுகள் உடலில் அதிகரிக்கும்போது அவை சிறுநீரகத்திற்கு பாதிப்பினை உண்டாக்குகின்றன.
பாதாம் பாலில் கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் பாதாம் பாலினை உண்டு சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இதய நலத்தைப் பாதுகாக்க (To protect heart health)
பாதாம் பாலானது கொலஸ்ட்ராலையோ, நிறைவுற்ற கொழுப்பினையோ பெற்றிருப்பதில்லை. இது குறைந்த சோடியத்தையும், நல்ல கொழுப்பினையும் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய நலத்தைப் பாதுகாக்கிறது.
பாதாம் பால் தயாரித்தல் (Preparation)
பாதாம் விதைகளை முதல் நாள் இரவே நீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் அதனுடைய தோலினை உரித்து எடுத்துவிட வேண்டும்.
பின் அதனை மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அக்கரைசலை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் தேன் மற்றும் பட்டை ஆகியவற்றை சேர்த்து உண்ணலாம்.
பாதிப்பு (Vulnerability)
பாதாம் பாலை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது தைராய்டு சுரப்பில் பாதிப்பினை உண்டாக்குகிறது.
யாருக்குக் கொடுக்கக்கூடாது (Not to be given to anyone)
இரண்டு வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு இப்பாலினைக் கொடுக்கக் கூடாது.
Share your comments