வாழைமரத்தில் உள்ள அனைத்துப் பாகங்களும் நமக்கு எல்லா வகையிலும் பயன்படக் கூடியது. இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம் தான் வாழைமரம். தற்போது, வாழைப்பூவின் பயன்களைக் காண்போம்.
வாழைப்பூவின் பயன்கள்:
- வாழைப்பூவில் வைட்டமின் பி (Vitamin B) அதிகம் உள்ளது. இந்தப்பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூலநோய் ஆகியவை குணமாகும்.
- கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை (Banana Flower) இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம்.
- வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.
- வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கும்.
- வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூலநோய் குணமாகும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்த மூலம் குணமாகும். தாது விருத்தியடையும்.
- வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் (Diabetes) கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும்.
- உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடல் சூடு குறையும்.
- வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை, கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை, கால் எரிச்சல் குணமாகும்.
- சிலருக்கு அஜீரணக் கோளாறு (Indigestion) ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக்கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் (Pepper) சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments