தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட நிலக்கடலை, உலகின் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது.இதனை வேர்க்கடலை என்றும் அழைப்பார்கள். நிலக்கடலையில் செய்யப்படும் கடலை மிட்டாய் மிகவும் பிரபலமானது.நிலக்கடலை தென்னிந்தியர்களின் உணவில் இயல்பாகவே பயன்படுத்தப்படும் ஒன்று. நிலக்கடலை பலவிதமான உணவு வகைகளுக்கும், துணை பதார்த்தங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது, நம்மில் பலருக்கு அதன் மருத்துவக் குணங்கள் தெரிவதில்லை.
பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது மேலும் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டியையும் தடுக்கிறது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. பெண்கள் நிலக்கடலை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்கவும் நிலக்கடலை உதவுகிறது.
உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்கிற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாத்து இதயம் சார்ந்த நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிலைக்கடலை பருப்பில் நிறைந்துள்ளது. மேலும் செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும்,மேலும் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்து, நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. பாதாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பொதுவாக பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால், நிலக்கடலையில்தான் இவற்றையெல்லாம் விட சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு. அதனால்தான் இது "ஏழைகளின் முந்திரி' என்று அழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க:
முந்திரி சாகுபடியில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
பருவம் தவறிய மழையால் பாதித்தது முந்திரி விவசாயம்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
Share your comments