1. வாழ்வும் நலமும்

நீங்கள் சுவாசிக்கும் காற்றினை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமா? இதோ எளிய வழி

KJ Staff
KJ Staff
Best Indoor Plants

பெருகி வரும் காற்று மாசினால் சுற்று சூழல் பெருமளவு பாதிப்புக்குள்ளாகி வருகிறது. சுத்தமான காற்றை சுவாசிப்பதே கடினமாகிவிட்டது. முடிந்த வரை நம் சுற்றுப்புறத்தை மரங்களால் பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்சம்  நாம் நமது வீட்டை சுற்றி மரங்கள் ஒன்றோ, இரண்டோ மரங்களை நட வேண்டும். அதுமட்டுமல்லாது செடி, கொடிகளை வளர்த்து மாசில் இருந்து நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களை பாதுகாக்கும். 

நகரங்கில் குடிருப்பவர்களுக்கு சுத்தமான காற்று என்பது சற்று கடினமாகிவிட்டது. வீட்டில் உள்ள காற்றை தூய்மை ஆக்குவதற்கு என்று சில செடிகளை பரிந்துரைக்கிறார்கள். இந்த வகை செடிகளை வீட்டில் வளர்க்கும் போது காற்று சுத்தமாவதுடன், நமக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் ’ Natural Air Purifier ‘ பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற, அதிக நன்மைகளை தரும் செடிகளைப் பற்றிய பார்வை  இதோ…

Aloe vera Plant

கற்றாழை (Aloevera)

கற்றாழை செடி வீட்டிற்குள்ளும், வெளியிலும் வளர கூடிய செடி. கிரமங்களில் வீட்டிற்கு வெளியில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். நெடுங்காலமாக ஆயர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் போற்றக்கூடிய ஒரு மூலிகை செடி என்றே கூறலாம். அது மட்டுமின்றி  காற்று சுத்திகரிப்பிலும் கற்றாழை முக்கியப்பங்கு வகிக்த்து வருகிறது என்பது பலருக்கும்  அறியாத ஒன்று. காற்றில் எப்போதும் புத்துணர்ச்சி இருப்பதை உறுதிசெய்கிறது இது. சருமம் சார்ந்த பிரச்னைகளுக்கு கை கொடுக்கும் மருந்தாக விளங்கி வருகிறது.

Bamboo Plant

மூங்கில் செடி (Bamboo Plant)

மூங்கில் மரங்கள் மற்றும் செடிகளை நாம் பல நேரங்களில், காடுகளில் தான் பார்த்திருப்போம்.  ஆனால் தற்போது அந்த மூங்கில் செடி நம் வீட்டை அலங்கரிக்கவும் பயன்படுகிறது. காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படுவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.எனவே இவ்வகை செடிகளை நீங்கள் தாராளமாக வீட்டிலேயே வளர்க்கலாம்.

Snake Plant

மருள் (Snake Plant)

மருள் தண்ணீரின்றி பல நாட்கள்  வாழக்கூடியது. குறைந்த வெளிச்சதிலும் நன்கு செழித்து வளர கூடியது. எல்லாவற்றிற்கும் மேலாக நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை நாள் முழுவதும்  வெளிப்படுத்தும்  தன்மை கொண்டவை. இது படுக்கையறையில் வைபதற்கு ஏற்ற தாவரமாகும். நாசாவால் அடையாளம் காணப்பட்ட சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரங்களில் இதுவும் ஒன்று.

Money plant

மணிபிளான்ட் (Money plant)

நம்மில் பலருக்கும் மணி பிளான்ட் என்றால் செல்வதை கொடுக்கும் தாவர இனம் என்று  மட்டுமே தெரியும். ஆனால் காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. இந்த செடியை டெவில் ஐவி என்றும் சொல்வார்கள். இந்த செடியானது வீட்டில் உள்ள ஃபார்மால்டிஹைடு, பென்சைன் மற்றும் சைலின் போன்ற தூசிகளை முற்றிலும் வெளியேற்றி, வீட்டை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

Lemon Grass

எலுமிச்சைப்புல் (Lemon grass)

அருகம்புல், கோதுமைப்புல் போல எலுமிச்சைப் புல்லும் நமக்கு நன்மை பயக்கும் செடி என்கிறார்கள்.  நல்ல வாசனையை தரக் கூடியது, இதனால் லெமன் கிராஸ் பாக்டீரியாக்கள், காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் இவற்றை அழித்து சுத்தமான காற்றை தருகிறது.

English Ivy Plant

ஐவி (Ivy)  

இது படரும் தன்மை கொண்ட கொடி. இதை பல  வீடுகளில் அழகுக்காக முகப்பில் படர விட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இவ்வகை செடி அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட என்றால் நம்ப முடிகிறதா. அதிலும் குறிப்பாக ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள், வீட்டில் இதனை வளர்ப் பது நல்லது. இது காற்றில் உள்ள ஃபார்மால்டிகைடு மற்றும் அசுத்தத்தை நீக்கக்கூடியது. வறட்சியிலும் எளிதாக வளரக் கூடிய தன்மை கொண்டது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Best Indoor Plants Which Can Actually Purify the Air in Your Home Published on: 20 August 2019, 04:47 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.