ஆன்லையில் 1 லட்சம் ரூபாய் ஐ-போனை ஆர்டர் செய்தவருக்கு, 200 ரூபாய் சாக்லெட் பார்சலில் வந்த சம்பவம் உக்கக்கட்ட வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் அலப்பறைகள்
ஒரு பொருள் வாங்க விரும்பினால், 4 அல்லது 5 கடை ஏறி, இறங்கி, அதன் தரம், பயன்படுத்தும் விதம், ஆயுட்காலம் என பல விவரங்களைக் கேட்டறிந்து, நம்முடைய பட்ஜெட்டில் அதனை வாங்கி மகிழ்வதுதான் வழக்கம்.
ஆனால் ஆனலை ஷாப்பிங் வந்தது முதல், மக்களின் எண்ணம் முழுவதும் அதன்பக்கமே உள்ளது. எதை வாங்க விரும்பினாலும் ஆன்லைனில் புக் செய்துவிடுகின்றனர்.
ஆன்லைனில் வரும் பொருளை வாங்கி நாம் பயன்படுத்தும்போதுதான், அதன் சாதக, பாதக அம்சங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதனால், ஆன்லைன் அட்டூழியங்களும் அண்மைகாலமாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
புக் செய்தது ஐ-போன் (Booked by iPhone)
அப்படி ஒரு சம்பவம் உச்சக்கட்டக் காமெடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த டேனியல் கரோல் என்பவர் சமீபத்தில் ஒரு ஆன்லைன் தளத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஐ-போனான 13 பிரோ மேக்ஸ் போனை ஆர்டர் செய்துள்ளார். அந்தப் போனின் பார்சல் இரண்டு வாரங்கள் தாமதமாக வந்துள்ளது. அதுவரை அவர் பல முறை அந்த ஆன்லைன் தளத்தை தொடர்பு கொண்டுள்ளார். இருப்பினும் ஆர்டர் செய்த பொருள் அவர் வீட்டிற்கு வந்துள்ளது. கூடவே அதிர்ச்சியும் காத்திருக்கிறது.
ஏற்கனவே தாமதமானதால் விரக்தியில் இருந்த டேனியல் அப்பாடி வந்துவிட்டதே என தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு, பார்சலைப் பிரித்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வந்தது சாக்லெட் (Came chocolate)
அந்த பார்சலில் ஐபோன் 13 பிரோ மேக்ஸிற்கு பதிலாக இரண்டு டேரி மில்க் ஓரியோ சாக்லேட் இருந்துள்ளது. அதை பார்த்து அவர் மிகவும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்துள்ளார்.
இதன்பின்னர் மீண்டும் டெலிவரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
எப்படி புரியும்? (How to understand?)
இதுகுறித்து டேனியல் கரோல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிருப்பதாவது:
பல வாரங்களுக்கு பிறகு நான் ஆர்டர் செய்த பார்சல் எனக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த பார்சலில் நான் ஆர்டர் செய்த ஐ -போனுக்கு பதில் எனக்கு கிறிஸ்துமஸ் பரிசாக சாக்லேட் வந்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பேசாமல் கடைக்கு போயி வாங்கிருக்கலாம். நாம் ஆசைப்பட்டப் பொருளை, கண்ணெதிரேத் தேடி வாங்கி அனுபவிக்கும் சுகமே தனிதான். இதெல்லாம் இந்த ஆன்லைன் ப்ரியர்களுக்கு எப்படி புரியும்.
மேலும் படிக்க...
Share your comments