பூஸ்டர் தடுப்பூசி போடுவதால், ஒமிக்ரானுக்கு எதிராக 88 சதவீத பாதுகாப்பு கிடைக்கும் என்பது இங்கிலாந்தில் நடந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
ஒமிக்ரான் (Omicron)
தென்ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. பரவத்தொடங்கிய ஒரு மாதத்திலேயே 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊடுருவி, அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவிலும் இதுவரை ஒமிக்ரானுக்கு 1800க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஒமிக்ரானில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நம் நாட்டிலும் தொடங்குகிறது.
அதிரடி ஆய்வு (Action study)
இந்தநிலையில், பூஸ்டர் தடுப்பூசி, ஒமிக்ரானுக்கு எதிராக எவ்விதம் செயல்படும் என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
அவற்றின் முடிவுகளை இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு அமைப்பு தொகுத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகள்:-
கூடுதல் பாதுகாப்பு (Extra security)
2 டோஸ் போட்டவர்களை விட பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமிக்ரானுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.
2-வது டோஸ் தடுப்பூசி போட்ட 6 மாதங்களுக்குப் பிறகு அதன் பாதுகாப்பு திறன் 52 சதவீதமாகக் குறைகிறது.
ஆபத்து குறைகிறது
ஆனால், பூஸ்டர் தடுப்பூசி போட்டவுடன் அதன் பாதுகாப்பு திறன் 88 சதவீதமாக அதிகரிக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி போடுவதால், ஒமிக்ரானுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆபத்தும் குறைகிறது. அந்த அளவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
வாய்ப்பு குறைவு (Less likely)
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 2 ஆய்வுகளும் 2 டோஸ் போட்டவர்களை விட பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து கணிசமாகக் குறைவாக இருப்பதைக் காட்டுகின்றன.
டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரானுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆபத்து மூன்றில் ஒரு பங்காக உள்ளது. எனவே அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும்.
மேலும் படிக்க...
Share your comments