பழுப்பரிசி எனும் பிரவுன் அரிசியில், ‘அலெயுரன்’ என்ற தோல் நீக்கப்படுவது இல்லை. இந்த தோல் உள்ள கைக்குத்தல் அரிசியில் 67 சதவிகித வைட்டமின் பி3, 80 சதவிகித வைட்டமின் பி1, 90 சதவிகித வைட்டமின் பி6, மாங்கனீசு, செலினியம், இரும்புச் சத்துகளில் பாதிக்கும் மேல் உள்ளன. மேலும் நார்ச் சத்தும், நல்லது செய்யும் அத்தியாவசியக் கொழுப்பு அமிலமும் உள்ளன. ஏறத்தாழ 10 சதவிகிதம் அரிசி வீணாகிறது என்று நெல் விவசாயிகள் வருந்திச் சொல்கின்றனர். எனவே பழுப்பு கைக்குத்தல் அரிசிதான் நல்லது.
இந்த உண்மை தெரிந்த பிறகு அரிசிக்கு ஏன் பாலிஷ் அலங்காரங்கள் என்று கேட்டால், ‘அலெயுரன்’ உறையை நீக்கினால்தான் அரிசியின் ஆயுள்காலம் அதிகரிக்கும். வணிகத்துக்கு அதுதானே அடிப்படை என வாதிடுகிறார்கள். அரிசியின் ஆயுள்காலத்தை நீட்டித்து லாபம் ஈட்டும் வணிகம், அதை உண்ணும் மனிதனின் ஆயுள்காலம் குறைவதைக் கண்டுகொள்வது இல்லை! பழுப்பாக இருக்கிறது என்பதாலேயே பலரும் இந்த அரிசியை சமைப்பது இல்லை.
‘பழுப்பு அரிசியே நல்லது’
முழுமையாகத் தோலுரித்து பாலிஷ் போட்டு வெள்ளையாக்கப்படும் அரிசியில் கார்போஹைடிரேட் தவிர இதரச் சத்துகள் ஏதும் இல்லை என்பது நமக்குத் தெரியும். மேலும் புழுங்கல் நெல்லில் உள்ள எண்ணெய்ச் சத்து அரிசியில் ‘அமைலோஸ்’ எனும் சர்க்கரைப் பொருள் எளிதில் உடைந்து, சர்க்கரையை ரத்தத்தில் கலக்கவிடாத ‘அமைலோ பெக்டின்’ எனும் ஒரு கூட்டுப்பொருளாக மாறுகிறது. அதனால் பழுப்பரிசியைச் சமைத்துச் சாப்பிடும் போது அதில் உள்ள சர்க்கரையை ரத்தத்தில் கலக்க விடாது. ஆதலால், தேவையான ஆற்றல் கிடைக்கிறது.
ரசாயன உரம் போடாமல் வளர்க்கப்பட்ட மாப்பிள்ளை சம்பா, கவுனி, காட்டுயாணம், குழியடிச்சான் முதலான பாரம்பரிய அரிசி ரகங்கள், பட்டை தீட்டாத தினை, சாமை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றின் அரிசிகள் லோ கிளைசிமிக் தன்மையைத் தரும். இந்தத் தானியங்களைச் சோறாகச் சமைத்த பின்பு, கீரை, பச்சை நிற அவரை, வெண்டை, கத்தரி போட்ட குழம்பு, எண்ணெயில் பொரிக்காத வேகவைத்த நாட்டுக்கோழிக் குழம்பு, மீன் குழம்பு கலந்து சாப்பிட்டால் சர்க்கரை வியாதி, இதய நோய், புற்று நோய், அதிக உடல் எடை, ‘பாலிசிஸ்டிக் ஓவரி’ எனும் சினைப்பை நீர்க்கட்டி போன்ற சிக்கல்கள் அண்டாமல் இருக்கும். இப்படியான பாலிஷ் பளபளப்பு இல்லாத தானியங்கள்தான் அன்றாட உணவாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க:
லியோ படத்தில் நடித்து வந்த முக்கிய பிரபல நடிகர் மனோபாலா காலமானார்
அரசு பேருந்து நிறுத்தம் கொண்ட உணவகங்களில் முறைகேடா? இந்த எண்ணில் புகாரளிக்கவும்
Share your comments