1. வாழ்வும் நலமும்

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Can I eat hot food that is poured into a plastic cover?

ஓட்டலில் வாங்கப்படும் உணவுகளில் பெரும்பாலான நேரங்களில், பிளாஸ்டிக்கு கவர்களில் ஊற்றி வழங்கப்படுகின்றன. குறிப்பாக இவற்றில் பெரும்பாலும், சூடான உணவுகள் பிளாஸ்டிக் பைகளில் ஊற்றப்பட்டு, நமக்கு பரிமாறப்படுகின்றன. இதனால் நமக்கு என்னென்னத் தீங்குகள் ஏற்படும் என்பதை எப்போதாவது சிந்தித்தது உண்டா? உண்மையில் பிளாஸ்டிக் கவர் மற்றும் டப்பாக்களில் சூடாகப் பரிமாறப்படும் உணவு, நாம் பலவிதநோய்களுக்கு ஆட்கொள்ளப்படுவதற்கு வித்திடுகின்றன. அவை எவை?

மார்பக புற்றுநோய்

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பதற்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் முக்கிய காரணமாகும். ஹார்வர்ட் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி, கடந்த 10 ஆண்டுகளில் மார்பகப் புற்றுநோய் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு தினசரி புழக்கத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துக்கொண்டிருப்பதே காரணமாகும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு அல்லது தண்ணீரை சேமித்து வைக்கும்போது அதிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும். அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்துவிடும். குறிப்பாக அதிலிருக்கும் டையாக்சின் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியது.

ஹார்மோன்

பிளாஸ்டிக் பொருட்களில் டைதைல் ஹெக்ஸைல் பித்தலேட் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இவை புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடியவை. மேலும் ஹார்மோன் செயல்பாடுகளை சீர்குலைக்கக்கூடியவை. பிளாஸ்டிக் பாத்திரங்களில் சாப்பிடுவதால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மற்றொரு ஹார்மோன், தைராய்டு ஹார்மோனாகும். இது படிப்படியாக தைராய்டு பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பாலியல் ஹார்மோன் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக விந்தணு உற்பத்தியை சீர்குலைத்துவிடும்.

சிறுநீரகக் கற்கள்

பிளாஸ்டிக் கொள்கலனில் சூழ்ந்திருக்கும் வெப்பநிலை உணவில் உள்ள மெலமைனின் அளவை அதிகரிக்க செய்துவிடும். இது சிறுநீர் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகப்பரிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எனவே சூடான உணவு வகைகளை பிளாஸ்டிக் பொருட்களில் அடைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக பீங்கான், எக்கு அல்லது கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நோய் அபாயம்

பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவை உட்கொள்வது அல்லது உணவை சூடாக்க பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பிளாஸ்டிக்கில் பைபினைல் ஏ உள்ளது. இது உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய், ஆஸ்துமா, கருத்தரிப்பில் சிக்கல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் பெண்களுக்கு பருவமடைதல் தொடர்பான சில உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளையும் உண்டாக்கும்.

மேலும் படிக்க...

கோடை வெப்பத்தைத் தகிக்க வைக்கும் தயிர்- எந்த நேரத்தில் சாப்பிடலாம்?

புற்றுநோய், சுகர் என பல நோய்க்குத் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு இலையே போதும்!

English Summary: Can I eat hot food that is poured into a plastic cover?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.