இந்தியச் சமையலில், வெங்காயத்திற்கும், பூண்டிற்கும் இன்றியாமையாத அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதிலும், பூண்டி அதிக மருத்துவப் பயன்களை நமக்குத் தரக்கூடியது என்பதால், அனைவருமேப் பயன்படுத்துவார்கள். ஆனால், அதிக அளவு எண்ணெய் மசாலா சேர்த்து பூண்டை உட்கொண்டால், உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும்.
கோடையில் பூண்டு (Garlic in summer)
கோடைகாலத்தில் பூண்டு சாப்பிடுவதால் அளப்பரிய நன்மைகள் ஏற்படுகின்றன. பூண்டு,பொதுவாக சூட்டை விளைவிக்கும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. ஆகையால், இதை வெயில் காலத்தில் சாப்பிடலாமா என்ற சந்தேகமும் எழுகிறது. இதற்கு ன் பதில் ஒன்றே ஒன்றுதான். அதிக அளவு எண்ணெய் மசாலா சேர்த்து பூண்டை உட்கொண்டால், உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். ஆனால், கோடையில் பூண்டை பச்சையாக உட்கொண்டால், பல நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கலில் இருந்து கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மலச்சிக்கலை போக்க பச்சை பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கோடையில் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகையால், இந்த வேளையில் பச்சை பூண்டை உட்கொள்வது நல்லது. பச்சை பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
சர்க்கரை
பச்சை பூண்டு உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக பூண்டை சாப்பிட வேண்டும். இது நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இதில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதய ஆரோக்கியம் (Heart health)
பச்சை பூண்டு இதயத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.கோடையில் தினமும் 1 முதல் 2 பல் பச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். இதன் காரணமாக, உங்கள் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இது மாரடைப்பின் வாய்ப்புகளையும் குறைக்கிறது.
இதனுடன், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளைத் தடுப்பதிலும் பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டு ஆன்டிவைரல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.
மேலும் படிக்க...
பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கால்சியம் குறைபாடு!
பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!
Share your comments