நடை முறையில் மக்கள் விஞ்ஞானத்தை நோக்கியே செல்கின்றன எளிதில் முடியக் கூடிய விஷயத்தை விரும்புகின்றன.ஆனால் அனைத்தும் கெடுதலாகவே அமைகிறது.இந்த அவசர உலகில் மக்கள் இயற்கை உணவை மறந்து பாஸ்ட் புட் என்ற நோயைத் தேடிச்செல்கின்றன.இயற்கையான முறையில் மக்கள் கோடைக்காலத்தில் உடல் வெப்பத்தை தணிக்க கம்பு கூல், தர்பூசணி,இளநீர்,ஆகியவற்றை உடலுக்கு சிறந்த முறையில் சத்தாகவும் ஆரோகியமாகவும் அமைகிறது.ஆனால் இன்றைய வாழ்கை முறையில் மக்கள் ரசாயனம் உணவுகளையும் பானங்களையும் தேடிச்செல்கின்றன. எத்தனை வேகமாக பாஸ்ட் புட்டை நோக்கிச் செல்கின்றனரோ அத்தனை பாஸ்ட் நோயை தேடிக்கொள்கின்றன
.உணவே மருந்து என்ற காலம் போய் உணவே நோய் என்ற நிலையை மக்கள் உருவாக்கி உள்ளன.அன்றைய காலத்தில் மக்கள் ஆரோக்கியமான உணவை உண்டு நோயில்லாத வாழ்வை வாழ்ந்து வந்தன.ஆனால் இன்றைய நவீன மக்கள் சிறுவயதிலேயே சர்க்கரை நோய்,ரத்தகொதிப்பு,புற்றுநோய், போன்ற நோயிகளை தாங்களாகவே ஏற்படுத்திக்க்கொள்கின்றன..கத்திரிக்கையி,பாகற்காய்,பயிர்,போன்ற சத்தான உணவுகளை மறந்து மக்கள் பர்கர்,நூடுல்ஸ்,கொக்ககோலா,போன்ற நோய் சேர்க்கும் உணவையே பெரிதும் விரும்பி உண்கின்றன.விஞ்ஞானம் வளர வளர மக்கள் நோயையும் வளர்த்துக்கொள்கின்றன.
Share your comments