அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தென்காசி மாவட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலகில், பாதுகாப்பு அலுவலர், உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட 8 பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். காலியாக உள்ள 11 பணியிடங்களும் தற்காலிக அடிப்படையில் நிரப்ப்பட உள்ளன.
பாதுகாப்பு அலுவலர் (Security Officer)
காலியிடங்கள் : 2
கல்வித் தகுதி (Educational Qualification)
இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருடம் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary)
ரூ.21,000
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Probation Officer)
காலியிடங்கள் : 1
கல்வித் தகுதி (Educational Qualification)
பி.எல் அல்லது எல்.எல்.பி வழக்கமான முறையில் சட்டம் பயின்றிருக்க வேண்டும். ஒரு வருடம் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary)
ரூ.21,000
ஆற்றுப்படுத்துநர் (Counselor)
காலியிடங்கள் : 1
கல்வித் தகுதி (Educational Qualification)
இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary)
ரூ.14,000
சமூகப்பணியாளர் (Social Worker)
காலியிடங்கள் : 2
கல்வித் தகுதி (Educational Qualification)
இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary)
ரூ 14,000
கணக்காளர் (Accountant)
காலியிடங்கள் : 1
கல்வித் தகுதி (Educational Qualification)
பி.காம் அல்லது எம்.காம் படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary)
ரூ.14,000
தகவல் பகுப்பாளர் (Information Analyser)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி (Educational Qualification)
பி.ஏ/பிசிஏ/பி.எஸ்சி புள்ளியியல் அல்லது கணக்கு படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary)
ரூ.14,000
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant and Computer Operator)
காலியிடங்கள் : 1
கல்வித் தகுதி (Educational Qualification)
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி கல்வியில் பட்டய பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary)
ரூ.10,000
புறத் தொடர்பு பணியாளர் (External Liaison Officer)
காலியிடங்கள் : 2
கல்வித் தகுதி (Educational Qualification)
பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary)
ரூ.8,000
வயதுத் தகுதி (Age Limit)
40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.
தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/03/2022030764.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி (Address)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் (பொ), அரசினர் குழந்தைகள் இல்லம், கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி அருகில், ரெட்டியார்பட்டி (இருப்பு), நெட்டூர் வழி, ஆலங்குளம் தாலுகா, தென்காசி – 627854
விண்ணப்பிக்கக் கடைசி தேதி (Last Date)
23.03.2022
மேலும் படிக்க...
4 பிரீமியம் செலுத்தினாலே போதும்- ரூ.1 கோடி கிடைக்கும்வரை!
கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!
Share your comments