தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா இளைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நடிகை ஆவார். அது மட்டுமல்ல, பல இளம்பெண்களின் மனதையும் திருடியவர். அவர் தன் நடிப்பில் மட்டுமின்றி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் அதிக அக்கறை செலுத்துகிறார்.
நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய திறமையால் முன்னணியில் இருப்பவர் தான் நயன்தாரா. 2003 இல் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா 19 ஆண்டுகள் ஆகியும் இன்னும் உடலை ஒல்லியாக கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அந்த வகையில், இத்தனை ஆண்டுகளான தன் உடலை ஃபிட்டாக வைத்திருக்க அவர் செய்யும் விஷயங்கள் என்ன, என்ன மாதிரி டயட்டை பின்பற்றுகிறார் என்று தெரிந்து கொள்வோம்.
உணவுமுறை
பொதுவாக நயன்தாராவின் உணவில் அதிகமாக பழங்கள், முட்டை, காய்கறிகள் மற்றும் லீன் மீட் ஆகியவற்றை தினசரி உணவில் கட்டாயம் இருக்கும். அதேபோல, காலை நேரத்தில் அதிகமாகவும் மதிய உணவு காலை நேர உணவை விட கொஞ்சம் குறைவாகவும் இரவு நேரத்தில் மதிய உணவை விட கொஞ்சம் குறைவாகவும் நயன்தாரா எடுத்துக் கொள்கிறார்.
காலை நேர ஸ்மூத்தி
தன்னுடைய உணவில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா முன்பெல்லாம் பழங்கள், யோகர்ட் ஆகியவற்றை காலை நேர உணவில் சேர்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சமீபத்தில் அவருடைய காலை உணவில் புதிய ரெசிபியைக் கடைப்பிடிக்கிறார். ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரையின்படி கடைப்பிடிக்கப்படும் புதிய டிஷ் எது தெரியுமா?
ஆரம்பத்தில் அதிக கலோரிகளாக இருக்குமோ என்று யோசித்த அவர், தினமும் அந்த ஸ்மூத்தியை எடுத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
தேங்காய் ஸ்மூத்தி
தேங்காய் ஸ்மூத்தி தான் தற்போது நயன்தாராவுக்கு மிகவும் பிடித்த காலை உணவாக இருக்கிறது.
தேவையான பொருள்கள்
தேங்காய் தண்ணீர் - 2 கப்
இளநீர் வழுக்கை பொடியாக நறுக்கியது - 1 கப்
சர்க்கரை - சுவைக்கேற்ப
தேங்காய் பால் - 1 கப்
ஐஸ் கட்டிகள் - தேவைப்பட்டால்
செய்முறை
மேற்கண்டவற்றில் தேங்காய் தண்ணீரையும் வழுக்கை துண்டுகளையும் சர்க்கரையும் சேர்த்து, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து கலந்தால் சுவையான தேங்காய்ப் பால் ஸ்மூத்தி ரெடி.
மேலும் படிக்க...
Share your comments