இந்தியாவில் கோவிட் 4வது அலை ஜூன் 22 தொடங்கி அக்டோபர் 24ம் தேதி வரை நீடிக்கும் என கான்பூர் ஐஐடி கணித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை உலுக்கி எடுத்தக் கொரோனா வைரஸ், லட்சக்கணக்கானோரைக் காவு வாங்கியது. இந்தப் பெருந்தொற்றுத் தாக்குதலுக்கு ஆளான ஆயிரக்கணக்கானோர், இன்னும், உடல்ரீதியான பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் உருமாறி வெவ்வேறு பெயர்களில் வலம் வந்தது. அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் அதிவேகமாக பரவியது. இருந்தாலும், உயிரிழப்புகள் அதிக அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டது. நாட்டில் கோவிட் பாதிப்புகள் சமீப காலங்களாக குறைந்து வருகின்றன. இந்த நிலையில், கோவிட் 4வது அலை பற்றிய கணிப்புகள் வெளிவந்துள்ளன.
4 மாதங்கள் நீடிக்கும்
இது குறித்து ஐ.ஐ.டி. கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
இந்தியாவில் கோவிட் 4வது அலையானது வருகிற ஜூன் 22ந்தேதி தொடங்கி அக்டோடபர் 24 ம்தேதி வரை நீடிக்கும். என்றாலும், புதிய கோவிட் வகைகளின் வெளிப்படுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் உள்பட மக்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றுக்கு ஏற்பவே 4வது அலை கடுமையாகவே அமையும். ஒருவேளை 4வது அலை பரவல் தோன்றினால், அது 4 மாதங்கள் வரை இருக்கும் என தெரிவித்து உள்ளது.
இந்த அலையானது ஆகஸ்டு 15ம்தேதி முதல் ஆகஸ்டு 31ம்தேதி வரை உச்சமடையும். அதன்பின்னர் குறையத் தொடங்கும். இவ்வாறு கான்பூர் ஐ.ஐ.டி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
மஹாசிவராத்திரி விழா - ஈஷாவில் கோலாகலக் கொண்டாட்டம்!
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - ஒரு பார்வை!
Share your comments