தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு 31 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால், மக்களிடையே அச்சம் பரவிவருகிறது.
தொற்றுக்கு 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மக்களின் அச்சத்தைப் போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்குமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சதி செய்யும் கொரோனா (Conspiracy corona)
கடந்த 2 ஆண்டுகளாக நம்மை வாட்டி வறுத்து எடுத்துவரும் கொரோனா, மிகவும் கொடூரமானது என்பது நாம் அனைவருமே அனுபவபூர்வமான உணர்ந்த உண்மை.இந்த வைரஸ் உருவமாறி வேறு உருவங்களில் நம்மைத் தாக்கிப் உயிர்பறிக்கச் சதித்திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகிறது.
இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக, இரவு ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு என பலவிதக் கட்டுப்பாடுகளை தமிழக அரசும் விதித்திருக்கிறது. இருப்பினும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை.
மாறாக, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆயிரத்திற்கும் கீழ் இருந்த தினசரி பாதிப்பு தற்போது 30 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது, பெரும் ஆபத்துக் காத்திருக்கிறது என்பதையேக் காட்டுகிறது.
30,744
தமிழகத்தில் நேற்றையத் தொற்று பாதிப்பு 30,744 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,744 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 31 லட்சத்து 3 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது.
37,178 பலி
கொரோனா தொற்று பாதிப்புக்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37,178 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1.94 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 6,452 ஆக உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் கேள்வி (People question)
கடந்த முறை தொற்று அதிகரித்தபோது, முழு ஊரடங்கை அமல்படுத்தி, நோய் பரவலைக் கட்டுப்படுத்திய அரசு, தற்போது ஏதேதோக் காரணம் கூறி, முழுஊரடங்கை அமல்படுத்த மறுக்கிறது. மக்களின் ஆரோக்கியத்திற்கு மிஞ்சியது எதுவுமில்லை என எண்ணுவதே, மக்கள் நலனே முக்கியம் எனக் கருதும் ஆட்சியாளர்களுக்கு அழகாக இருக்கும். எனவே ஊரடங்கு அமலுக்கு வருமா? என்பதே சாமானிய மக்களின் கேள்வியாக இருக்கிறது.
மேலும் படிக்க...
10 நாட்கள் தனிமைப்படுத்துதல் போதாது - புதிய ஆய்வில் தகவல்!
கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!
Share your comments