தமிழகத்தில் இரண்டு வாரங்கள் மக்கள் ஒத்துழைத்தால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
பெரும் சவால் (Great challenge)
கொரோனா பரவல் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு என பல்வேறுக் கட்டுப்பாடுகளை அரசு விதித்த போதிலும், பொதுமக்களில் ஒரு பங்கினர் விபரீதத்தை உணராமல் செயல்படுகின்றனர்.
இதனால் வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது என்பது, பெரும் சவாலாகவே உள்ளது.
ஆய்வு (Study)
இந்நிலையில் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தை, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அவசியத் தேவை
பின்னர் , அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாட்டில் 2.68 லட்சம் பேர் 'ஒமிக்ரான்' வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பொது மக்களின் ஒத்துழைப்பு, மிக அவசியத் தேவையாக உள்ளது. ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டளை மையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
8,595 நோயாளிகள்
தமிழகத்தில் மொத்தம் 1.91 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன, அதில், கொரோனாவுக்கு மட்டும் 1.28 லட்சம் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது 8,595 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர்.
டெல்டா வைரஸ் பாதிப்பு
தமிழகத்தில் ஒமிக்ரான் மட்டுமின்றி, 10 முதல் 15 சதவீதம் வரை, டெல்டா வைரஸ் பரவலும் உள்ளது. ஒமிக்ரானைப் பொறுத்தவரைத் தடுப்பூசி போடாதோர், முதியோர், கூட்டத்தில் இருப்போருக்கு, அதிக பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
தடுப்பூசி கட்டாயம்
கொரோனா அறிகுறிகள் உள்ளோர், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 63 லட்சம் பேர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. 15 முதல் 18 வயதுடையோரில், 80 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
2 வாரம்
அடுத்த இரண்டு வாரங்களில் பொது மக்கள் அனைவரும் ஒத்துழைத்து, நோய்க் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தால், தொற்று அதிகரிப்பதை குறைக்கலாம்.கொரோனா தொற்றை குறைக்க தான் கடற்கரைகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
தமிழகத்தில் ஒரே நாளில் 11 பேர் பலி- 24,000த்தை நெருங்கியக் கொரோனா பாதிப்பு!
Share your comments