சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான கோவிட் தடுப்பூசிக்கு ஓரிரு நாள்களில் அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
உலகை உலுக்கியது (Shook the world)
உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. ஆரம்பத்தில் லட்சக்கணக்கில் இருந்து கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஏதுவாக இரவு நேர ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டன.
பாதிப்புக் குறைந்தது (The impact is minimal)
இதன் பயனாக தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேல் சென்ற தினசரி கொரோனா பாதிப்பு, படிப்படியாக 3 ஆயிரமாகக் குறைந்தது.
உலக நாடுகள் (Nations of the world)
இதையடுத்து, கொரோனா என்றக் கோர தாண்டவம் ஆடிய பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
2 வகைகள் (2 types)
இந்தியாவில் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவேக்சின், அஸ்டா ஜெனகா மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசிகள் (Vaccines)
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக்-வி, மாடர்னா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகள் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
12 வயதிற்கு மேற்பட்டோருக்கு (For those over 12 years of age)
இந்நிலையில், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கோவிட் தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. சைகோவ்-டி (ZyCoV-D) என்னும் இந்த தடுப்பூசியை சிறுவர்கள் மற்றும் வயது வந்தோருக்கும் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை தரவுகளை அந்நிறுவனம், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்பித்தது.
ஒப்புதல் (Approval)
இந்நிலையில், சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள சைகோவ்-டி தடுப்பூசிக்கு ஓரிரு நாள்களில் அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்படும் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதற்கான தரவுகளை ஆராய்வதற்காக இந்த வாரம் நிபுணர் குழு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 தவணைகள் (3 installments)
உலகின் முதல் பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசியான சைகோவ்-டி, மூன்று தவணைகளாக செலுத்தப்படவுள்ளது. அவசர கால பயன்பாட்டுக்காக 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதேபோல கோவேக்சின் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கான அனுமதியும் செப்டம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் மாவட்டத்திற்குள் - மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து
Share your comments