இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையில், உடல் எடை என்பது, தற்போது சிறுவர் முதல் பெரியவர்கள் வரைத் தீராதப் பிரச்னையாக உருமாறிவிட்டது.
எனவே உடல் எடையைப் பராமரிப்பதோடு மட்டுமல்லாமல்,செரிமானப் பிரச்னைக்கும் தீர்வு தருகிறது. ஏனெனில், மசாலா மற்றும் மூலிகைகள் உணவுகளுக்குச் சுவையைச் சேர்ப்பது மட்டுமல்லாமல், அவை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன.
எடைக் குறைப்புக்கு உதவுவது முதல் செரிமான பிரச்சனைகளைத் தடுப்பது வரை, பல சமையலறை மசாலாப் பொருட்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன. எனவே நம் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள, கூடுதலாக சில சத்தானப் பொருட்கள் வாங்கிப் பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் சமையலறையில் உள்ள பொருட்களையேப் பயன்படுத்தலாம்.
அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருந்தால், காலையில் எழுந்ததும் முதலில் சீரகத் தண்ணீரைக் குடிக்கலாம். இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது, வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது.
சீரக நீரின் நன்மைகள்
-
கலோரிகள் குறைவு
-
செரிமானத்திற்கு உதவுகிறது
-
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
-
உடலை நச்சு நீக்குகிறது
-
அழற்சி எதிர்ப்பு நன்மைகளை வழங்குகிறது
-
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது
தயாரிப்பது எப்படி?
-
ஒரு டம்ளரில் தண்ணீர் சேர்த்து, அதில் சிறிதளவு சீரக விதைகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
-
காலையில் எழுந்ததும் தண்ணீரை வடிகட்டி, அதில் சூடான நீரைச் சேர்த்துப் பருகவும்.
எப்படி உதவுகிறது?
நீண்ட நேரம் ஊறவைப்பதால், சீரக விதைகள் வீங்கி, பயோஆக்டிவ் கலவைகளைத் தண்ணீரில் வெளியிடுகின்றன. சீரகம் இரத்த குளுக்கோஸின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும் பல வகைகளில் உதவுகிறது. சீரகம் உங்கள் செரிமானத்திற்குச் சிறந்தது, நச்சுகளை நீக்குகிறது மேலும், நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சீரக தண்ணீரை விட சிறந்தது எதுவுமில்லை!
தகவல்
மிஷா அரோரா
ஊட்டச்சத்து நிபுணர்
மேலும் படிக்க...
Share your comments