1. வாழ்வும் நலமும்

குட்டீஸ்களின் உடல் பருமன் பிரச்னை- தடுக்க சில டிப்ஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Cuties Obesity Problem- Some Tips to Prevent!

குழந்தைகள் என்றாலே அவற்றின் உடல் எடையும், சேட்டைகளும், கொஞ்சிப் போதுவதுமே நினைவுக்கு வரும்.

கொளு கொளு குழந்தை

அதில் குட்டிக் குழந்தைகள் என்றால், அதிலும் சுமார் 2 வயது வரை கொளு கொளுவென இருப்பதைப் பார்க்கும்போது, நம் மனதில் அலாதியான மகிழ்ச்சி பொங்கும். உண்மையில் அந்த மகிழ்ச்சி நம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் நமக்குள்ள அக்கறை மற்றும் பெருமிதத்தின் வெளிப்பாடு ஆகும்.

சவால் (The challenge)

இருப்பினும் 5 வயதிற்கு மேற்பட்டக் குழந்தைகள் அண்மைகாலமாக உடல்பருமன் பிரச்னையுடம் வலம் வருவது, தற்போதைய மாபெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இது, எதிர்கால சந்ததியின் ஆரோக்கியத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்பதுதான் உண்மை.எனவே உடல் பருமன் பிரச்னை வராமல் தடுக்கவும், அதில் இருந்து விடுபடவும், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இங்கு பட்டியிலிடுகிறோம்.

உடல் பருமன் பிரச்னை (Obesity problem)

இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகள், விளையாடுவதற்கோ, பிற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கோ சிரமப்படுவார்கள். உடல் பருமன் பிரச்சினையை முன் கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது கடுமையான நோய் அபாயத்தை குறைக்கும்.

காரணம் (Reason)

சிறு வயதிலேயே அதிக உடல் எடையுடன் இருப்பதற்கு அதிக கலோரிகளை உட்கொள்வது, போதுமான உடற்பயிற்சிகளில் ஈடுபடாதது முக்கிய காரணங்களாகும். உணவுப் பழக்கத்தில் முக்கியமான மாற்றங்களை செய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

திரவ உணவு (Liquid food)

குழந்தைகள் பெரும்பாலும் தண்ணீர் அதிகம் பருகமாட்டார்கள். திரவ உணவுகளை சாப்பிடுவதற்கும் ஆர்வம் காட்டமாட்டார்கள். நொறுக்குத் தீனிகளைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை தவிர்த்து நாள் முழுவதும் திரவ உணவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் உட்கொள்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.

அதற்காக வெறுமனே பழ ஜூஸ் மட்டும் கொடுக்கக்கூடாது. தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், இளநீர் போன்ற பிற திரவ உணவுகளை சாப்பிட வைக்கலாம். இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.

நார்ச்சத்து உணவுகள் (Fiber foods)

உடல் எடையை நிர்வகிப்பதில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முழு தானியங்களை உட்கொள்வதன் மூலம் குழந்தை பருவ உடல் பருமனை சமாளிக்க முடியும்.

காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட வைக்கலாம். இது குடல் இயக்கம் சீராக நடைபெறவும், எடை மேலாண்மையை பராமரிக்கவும் உதவும். நொறுக்குத் தீனிக்கு மாற்றாக பழ சாலட் கொடுப்பது முக்கியமானது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை சீராக வைத்திருக்கவும் உதவும். தினமும் இரண்டு வகைப் பழங்களைச் சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து (Nutrition)

காலையில் எழுந்தவுடன் ஒரு கைப்பிடி ‘நட்ஸ்’ உட்கொள்ளலாம். இவை அதிக ஊட்டச்சத்து மிக்கவை. ஆரோக்கிய நன்மைகளை வழங்குபவை. எனவே இதனை தவிர்க்கக்கூடாது. தினமும் முந்திரி அல்லது பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் சாப்பிடலாம். ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது.

மேலும் படிக்க...

தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!

வீட்டில் இருந்தே மாதம் ரூ.60,000 சம்பாதிக்கலாம்- SBI யின் அரிய வாய்ப்பு!

English Summary: Cuties Obesity Problem- Some Tips to Prevent! Published on: 26 September 2021, 08:43 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.