1. வாழ்வும் நலமும்

வெறும்வயிற்றில் தினமும் நெய்- மலச்சிக்கலை நீக்கும் மந்திரசாமி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Daily ghee on an empty stomach

அன்றாட வாழ்க்கை நெருக்கடி இல்லாமல் செல்ல, ஆரோக்கியத்திற்கு தொல்லை கொடுக்காத உணவுகள் மிக மிக அவசியம். அப்படி இல்லாமல், நேரத்திற்கு சரியாகச் சாப்பிடுவது இல்லாமல், காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையே பெரும் இடைவெளி விட்டுச் சாப்பிடுவது, காலை உணவை ஸ்கிப் (Skip) செய்வது போன்றவற்றால், வயிற்று உபாதைகள் அதிகரிக்கக்கூடும்.

அவ்வாறு வயிற்றுப்பிரச்னையால் செரிமானப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? உங்ளுக்கு ஒரு சூப்பர் ஆயுர்வேத ரெமிடி சொல்லட்டுமா? அந்த மந்திரப் பொருள்தான் நெய்.
நெய் ஒரு சூப்பர்ஃபுட். ஆனால் அதன் அத்தனைப் பலன்களையும் அறுவடை செய்ய, அதை உட்கொள்ளும் சரியான வழியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவது முதல் வயிற்று வலியை கொடுப்பது வரை, மலச்சிக்கல் ஒரு பிரச்சனையாக இருக்கலாம். இந்த மலச்சிக்கலில் இருந்து தீர்வு காண, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரும்,, ஒரு தேக்கரண்டி நெய்யும் போதும். ஆம், இது மிகவும் எளிது.

எப்படி வேலை செய்கிறது?

நெய்யில் நிறைந்துள்ள பியூட்ரிக் அமிலம் மலச்சிக்கலை போக்க உதவும் என்று கூறப்படுகிறது. நெய் சிறந்த இயற்கை மலமிளக்கி. அத்துடன் எடை இழப்பு, தூக்கமின்மை, எலும்பு வலிமையை அதிகரிப்பது போன்ற பிற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. நெய் உடலுக்கு லூப்ரிகேஷன் வழங்குகிறது, இது குடல் பாதையை சுத்தம் செய்து, கழிவுகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் அபாயம் படிப்படியாகக் குறைகிறது.

செய்முறை

ஒரு தேக்கரண்டி நெய்யுடன் 200 மில்லி வெதுவெதுப்பான நீரை எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த பலன் கிடைக்கும். செரிமானப் பாதை, குடல் மற்றும் பெருங்குடல் கரடுமுரடாக, கடினமாக மற்றும் வறண்டதாக மாறும்போது மலச்சிக்கல் ஏற்படுகிறது. நெய்யின் லுப்ரிகேட்டிங் பண்புகள் அமைப்பை மென்மையாக்க உதவுதுடன், உடலில் இருந்து கழிவுகளை சீராக வெளியேற்றவும் செய்கிறது.

மேலும் படிக்க...

குளிருக்காகப் பற்ற வைத்தஅடுப்பு- பறிபோன 5 உயிர்கள்!

கண்ணத்தில் அறைந்த மணமகன்- கல்யாணத்தை நிறுத்திய மணமகள்

English Summary: Daily ghee on an empty stomach Published on: 02 February 2022, 08:39 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.