சப்போட்டா, ஒரு வெப்பமண்டலங்களில் வளரும் பழம், இந்த பழத்தின் சுவை மிகவும் இனிமையாக இருக்கும். கருப்பு நிறத்தில் இருக்கும் கொட்டை அல்லது விதைகளை உள்ளடக்கியது இந்த சப்போட்டா பழம். பழங்கள் சாலடுகள், ஜாம்ஸ், ஐஸ்கிரீம்கள் மற்றும் மில்க் ஷேக்குகளில் சேர்த்து சாப்பிடும் பொழுது கூடுதல் மற்றும் அதிக சுவையை தருகிறது.
இந்த பழம் நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் பல தாதுக்களின் சரியான ஆதாரமாகும். குடல் ஆரோக்கியம், முகப்பரு, பார்வை பிரச்சனை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு சப்போட்டா ஒரு வரமாக கருதப்பட்டாலும், அதன் அதிகப்படியான நுகர்வு பின்வரும் குறைபாடுகளைக் கொண்டிருக்கலாம்.
சப்போட்டாவின் அதிகப்படியான நுகர்வு காரணமாக ஏற்படும் பக்க விளைவுகள்
1. ஒவ்வாமை விளைவுகள்
லேடெக்ஸ் மற்றும் டானின்கள் எனப்படும் கலவை சிலருக்கு ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தலாம். இது சில நோயாளிகளிடமிருந்து எடுத்த கருத்துக்கணிப்பின் படி, பழம் உட்கொண்ட உடனேயே சிலருக்கு தோல் தடிப்புகள் மற்றும் கழுத்தைச் சுற்றி வீக்கம் போன்ற வடிவத்தில் ஏற்படலாம்.
2. நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமானதல்ல
இரத்தத்தில் சுக்ரோஸ் அளவை அதிகரிக்கக்கூடிய சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் இந்த சப்போட்டா பழத்தில் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. வயிற்று வலி
அதிக நார்ச்சத்து மற்றும் டானின் கலவைகள் காரணமாக, அதன் நுகர்வு சில சமயங்களில் வயிற்று வலியை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்செயலாக அதன் விதைகளை விழுங்குவதால் வாந்தியும் ஏற்படலாம்.
4. செரிமான பிரச்சினைகள்
சப்போட்டா பழத்தை அதிகமாக உட்கொள்வது குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் செரிமான அமைப்பில் அழுத்தம் கொடுப்பதால் செரிமானம் மற்றும் வயிற்றை பாதிக்கலாம்.
5. வீக்கம் மற்றும் அரிப்பு
சப்போட்டாவில் உள்ள டானின் கலவை காரணமாக, அதை அதிகமாக உட்கொள்வது அரிப்பு, எரிச்சல் மற்றும் தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் சப்போட்டாவை அளவாக சாப்பிட வேண்டும். எதையும் அதிகமாகச் சாப்பிடுவது பின்விளைவுகளை கண்டிப்பாக ஏற்படுத்தும். அளவோடு சாப்பிடுவது பல நன்மைகளைப் பெற உதவும்!
மேலும் படிக்க...
Share your comments