1. வாழ்வும் நலமும்

கொடிய யானைக்கால் நோய்: 5 முன்னெச்சரிக்கை அறிகுறிகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Deadly Elephant Disease: 5 Precautions!

நோய் என்பதே மனிதனை வாட்டும் அரக்கன் என்று சொல்லலாம். அதிலும் மிகவும் கொடியதாகக் கருதப்படும் யானைக்கால் நோய், பாதிக்கப்பட்ட நபருக்கு நரக வேதனையைத் தருகிறது. இருப்பினும், இந்த நோய் பரவுவதற்கு, கொசுக்களே காரணம் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

நம்மைக் கடிக்கும் கொசுக்களில், யானைக் கால் நோயைக் கொண்டுவரும் கொசு எது? என்பதைக் கண்டறிவது கடினான விஷயம். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக இருப்பது சாலச்சிறந்தது. டெங்கு, மலேரியா, ஜிகா மற்றும் சிக்குன்குனியா, யானைக்கால் என பல நோய்களை கொசுக்கள் பரப்புகின்றன.

யானைக்கால் நோய்

லிம்பேடிக் ஃபைலேரியாசிஸ் (lymphatic filariasis) என்றும் அழைக்கப்படும் யானைக்கால் நோய், பெண் கொசுக்களால் பரப்பக்கூடிய ஒட்டுண்ணிப் புழுக்களால் ஏற்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், யானைக்கால் நோயின் அறிகுறிகள் ஒரு குறிப்பிட்ட நிலை வரை தோன்றாது, எனவே, இந்த நோயை கண்டறிவது கடினம். இருப்பினும், யானைக்கால் நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்தால் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

கால்களில் வீக்கம்

கைகள் மற்றும் கால்கள் காரணமே இல்லாமல் வீங்குவது யானைக்கால் நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று. உடலில் திரவம் சேர்வதன் காரணமாக கால்கள் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்படலாம்.

விதைப்பை விரிவடைதல்

நோயின் பிற்பகுதியில் காணப்படும் விதைப்பையின் வளர்ச்சி யானைக்கால் நோயின் அறிகுறியாகும். ஆண்குறியின் கீழ் உள்ள தோல் பின்வாங்கப்படலாம், இது வலி மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்துகிறது. ஃபைலேரியா நிணநீர் மண்டலத்தை சேதப்படுத்துவதால், உடலின் பல்வேறு பாகங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

வீக்கம்

ஆண்களைப் போலவே, யானைக்கால் நோய் பெண்களின் பிறப்புறுப்புகளை பாதிக்கிறது. இது தொடைகளுக்கு இடையில் தோலில் புண் ஏற்படுவது, மார்பகத்தை பெரிதாக்குகிறது.நிணநீர் கணுக்கள் மற்றும் மார்பகங்களில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் நிணநீர்க்குழாய்கள் மற்றும் நிணநீர் கணுக்கள் வளர்ச்சியடைகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவரின் தோல் வறண்டு தடிமனாக இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு சரியான இரத்த ஓட்டம் இல்லாததால், புண், குழி மற்றும் நிறம் மாறுவது என ஹைபர்கெராடோசிஸ் (hyperkeratosis) போன்ற நிலைக்கு இட்டுச் செல்லும்..

உடல்நலக்குறைவு

கடுமையான காய்ச்சல் மற்றும் குளிர் போன்ற பிற அறிகுறிகள் நோய் தோன்றும். இது தொற்று மற்றும் வீக்கத்தால் ஏற்படும் உடலில் ஏற்படும் வெப்பத்தால் ஏற்படும்.

தகவல்
டாக்டர் கிருஷ்ணகாந்த் டெப்ரி
மும்பை

மேலும் படிக்க...

குழந்தைகளுக்கு 2 மாதம் நீடிக்கும் கொரோனா - ஆய்வில் தகவல்!

கவனக் குறைவு வேண்டாம் - ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

English Summary: Deadly Elephant Disease: 5 Precautions! Published on: 24 June 2022, 07:35 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.