1. வாழ்வும் நலமும்

காற்றழுத்த தாழ்வுப் பகுதி- நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Depression - Chance of heavy rain in Nilgiris, Coimbatore and Kanyakumari districts!

வடக்கு மற்றும் மேற்கு வங்கக்கடலை ஒட்டி நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு, நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடியக் கனமழை பெய்யக்கூடும் என்றுச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

வலுப்பெற வாய்ப்பு (Opportunity to strengthen)

இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக் கூடும்.

மிதமான மழை (Moderate rain)

இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வறண்ட வானிலை (Dry weather)

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

14.06.2021 ,15.06.2021

கனமழை (Heavy rain)

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
எஞ்சிய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, தர்மபுரி, சேலம், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு (13-06-21) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

14.06.21

அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு (14-06-21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மழைபதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை  (Warning for fishermen)

வங்கக் கடல் பகுதிகள் (Areas of the Bay of Bengal)

13.06.2021 முதல் 15.06.2021 வரை 

மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள் (Areas of the Arabian Sea)

13.06.2021 முதல் 15.06.2021 வரை

கேரளா, கர்நாடக மற்றும் கோவாக் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

13.06.2021 முதல் 17.06.2021 வரை

அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

English Summary: Depression - Chance of heavy rain in Nilgiris, Coimbatore and Kanyakumari districts! Published on: 13 June 2021, 04:01 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.