1. வாழ்வும் நலமும்

பறவை எச்சத்தால் பரவும் நோய்கள்- மக்களே உஷார்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

வீட்டில் வளர்க்கும் செல்ல பறவைகளின் எச்சத்தால் மனிதர்களுக்கு நோய்கள் பரவுமா? என்பதே தற்போது சமூக ஊடங்களின் பேசும் பொருளாக மாறிவருகிறது. நோய்கள் பரவுவது உண்மைதான் என்றபோதிலும், சில நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்தினால், நோய்களில் இருந்துத் தப்பலாம்.

மனித வாழ்வின் அங்கம்

குடிசை முதல் ஆடம்பர மாளிகையில் வசிப்பவர்கள் வரை, தங்களுடன் நாய், பூனை, பறவைகள் ஆகியவற்றை வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவற்றுக்கென உணவு முதல் மருத்துவம் வரை கவனம் செலுத்துகின்றனர்.
அதனால், செல்ல பறவைகள் வளர்ப்பு மனித வாழ்வில் அங்கமாக மாறியுள்ளது.

பறவைகளின் குட்டி சிணுங்கல்கள் மற்றும் நடவடிக்கைகள் நம்மை வெகுவாக கவர்கின்றன. வீட்டில் செல்ல பறவைகளை வளர்க்கும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளை கடைபிடிக்க தவறும் போது பல்வேறு பிரச்சனைகளையும் நோய்களையும் சந்திக்க நேரிடுகிறது.

டைபாய்டு நோய்

செல்ல பறவைகளின் வயிற்றில் சால்மோனெல்லா என்னும் நுண்ணுயிரிகள் உள்ளன. குறிப்பாக அவற்றின் எச்சத்தை தவறுதலாக மனிதன் உண்ணும் போதோ, உணவில், குடிநீரில் கலக்கும் போதோ டைபாய்டு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

பலவித வலிகள்

இதனால் மனிதர்களில் குறிப்பாக குழந்தைகளுக்கு பேதி, உடல் வெப்பம் அதிகரிப்பது, வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படும்.கிளமைடோபைலா சிட்டாஸி நுண்ணுயிரியால் உண்டாகும் சுட்டகோஸிஸ் என்னும் நோய், கிளி, மக்காவ்(Macaw), காக்கடைல்(Cockatiel) போன்ற பறவைகள் மூலம் பரவும். செல்ல பறவைகளின் உலர்ந்த எச்சமானது, காற்றிலுள்ள தூசியில் கலந்து மனிதனுக்கு பரவுகிறது. இதனால் உடல் வெப்பம், தலைவலி, உடல் வலி மற்றும் வறண்டு இருமல் ஏற்படும்

சமையலறையில் கூடாது

செல்ல பறவை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பறவைகளின் கூண்டு, உணவு பாத்திரம் மற்றும் எச்சத்தை கையாளும் போது கைகளை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும். கூண்டுகளை காற்றோட்டமுள்ள இடங்களில் வைக்க வேண்டும். புகை மிகுந்த மற்றும் உருவாகக்கூடிய சமையலறையில் வைக்கக்கூடாது.

செய்யக்கூடாதவை 

  • பறவைகளை முத்தமிடுதல், முகத்திற்கு அருகில் வைத்து கொஞ்சுதல் கூடாது. 

  • பறவைகளுக்கு தேவையான உணவு மற்றும் நீரை அளிக்க வேண்டும். 

  • கூண்டில் உள்ள எச்சம் மற்றும் உண்ணாமல் விட்ட உணவுகளை நீண்ட நேரம் அப்படியே வைக்காமல் உடனுக்குடன் அகற்றுதல் மிகவும் அவசியம்.

மேலும் படிக்க...

English Summary: Diseases spread by bird droppings- people beware! Published on: 03 July 2022, 11:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.