மூளைக்கு நல்லது என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வெண்டைக்காய். ஏனெனில் வெண்டைக்காயை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொண்டால், கணக்குப் போட முடியாமல் தவிப்போரும், கணக்கு போடமுடியும். அந்த அளவுக்கு மூளைக்கும், நினைவாற்றலும் நல்லது வெண்டைக்காய்.
அந்த வகையில் அற்புதப் பயன்தரும் வெண்டைக்காயை கோடையில் சாப்பிடக்கூடாது என்றுக் கூறப்படுகிறது.அந்தக் கூற்று உண்மையல்ல. ஏனெனில், எந்த காலத்திலும் நாம் வெண்டைக்காயைச் சாப்பிடலாம். வெண்டைக் காய் மட்டுமல்ல எந்த காய்கறிகளையும் சாப்பிடலாம். இருப்பினும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏற்கனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப சில காய்கறிகளை தவிர்க்கலாம் அல்லது குறைவாக சாப்பிடலாம்.
மருத்துவ நன்மைகள்
சர்க்கரை கட்டுப்பாடு
வெண்டைக்காயை நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிடலாம். இதில் அதிக நார்ச்சத்து உள்ளது என ஏற்கனவே கூறியிருக்கிறோம். அதனால், செரிமான அமைப்புகள் சரியாகும் நேரத்தில், ரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்திருக்க உதவும்.
புற்று நோய் பாதிப்பு
மற்ற காய்கறிகளை விட வெண்டைக்காயில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் தன்மை வெண்டைக்காய்க்கு உண்டு. செரிமான மண்டலம் சீராக இருக்கும்போது வயிற்றில் புற்றுநோய் ஆபத்துகள் வராது.
நோய் எதிர்ப்பு சக்தி
கொரோனா போன்ற தொற்று நோய் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை அன்றாட உணவுகளில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இது உங்களை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.
கொலஸ்ட்ரால் குறையும்
மற்ற காய்கறிகளைப் போலவே வெண்டைக்காயிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன அதேநேரத்தில் வெண்டைக்காயில் கூடுதலாக பெக்டின் என்ற தனிமம் உள்ளது. இது கெட்டக் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் சமநிலையில் இருந்தால் மாரடைப்பு அபாயம் குறைவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க...
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?
பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!
Share your comments