இன்றும் நமது கிராமங்களில் நாட்டு மருந்து கடைகளில் மருந்து வாங்கி உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பொதுவாகவே நமது ஆயுர்வேதத்தில் பெரும்பாலான மருந்துகள் பொடியாகவோ, சூரணமாகவோ, தைலங்களாகவோ, வேர்களாகவோ இருக்கும். இவ்வனைத்தும் பக்க விளைவுகள் ஏதுமின்றி நமது உடலை நோயின் பிடியிலிருந்து படிப்படியாக நீக்கவல்லது.
நாட்டு மருந்து கடைகளில் பல வகையான பொடிகளை பார்த்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் அதன் முழுமையான பலன் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?... இதோ உங்களுக்காகவே
பொடிகள் மற்றும் பலன்கள்
அருகம்புல் பொடி - அதிகபடியான உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்க வல்லது. இது சிறந்த ரத்தசுத்தி
நெல்லிக்காய் பொடி - வைட்டமின் “சி” நிறைந்த இப்பொடி பற்கள் எலும்புகள் பலப்படும்.
வேப்பிலை பொடி - குடல் புழு, உடல் அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
வெந்தய பொடி - உடல் சூடு தணியும், வாய் புண், வயிற்றுபுண் ஆற்றும். சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து.
வல்லாரை பொடி - படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றலை தர வல்லது. மேலும் நரம்பு தளர்ச்சி சிறந்தது.
கறிவேப்பிலை பொடி - ரத்தத்தை சுத்திகரிக்க கூடியது, தலை முடி உதிர்வை தடுத்து கூந்தல் வளர்சியினை தர கூடியது. கண்பார்வைக்கும் சிறந்தது.
வில்வம் பொடி - உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து இரத்த கொதிப்பு வராமல் பாதுகாக்கும்.
நாயுருவி பொடி - உள் மற்றும் வெளி மூலத்திற்க்கும், நவ மூலத்திற்க்கும் சிறந்தது.
ஜாதிக்காய் பொடி - நரம்பு தளர்ச்சி நிக்கி ஆண்மை சக்தி பெற செய்யும்.
திப்பிலி பொடி - உடல் அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
கடுக்காய் பொடி - குடலில் உண்டாகும் புண் ஆற்றும் அதுமட்டுமல்லாது சிறந்த மலமிளக்கியாகும்.
கண்டங்கத்திரி பொடி - மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
தூதுவளை பொடி - நாள் பட்ட இருமல், சளி, ஆஸ்துமா போன்றவற்றிற்கு சிறந்தது.
ஆவரம்பூ பொடி - சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து அதுமட்டுமல்லாது உடலை பொன்னிறமாக்கும் வல்லமை கொண்டது.
ஓரிதழ் தாமரை பொடி - ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை, வெள்ளை படுதல் போன்ற அனைத்து பிரச்சனைக்கும் தீர்வாகும்.
அமுக்கரா பொடி - உடல் எடை கூட்ட வல்லது . மலட்டு தன்மையை நிக்க வல்லது.
சிறுகுறிஞான் பொடி - சர்க்கரை நோய்க்கு ஏற்ற மருந்தாகும்.
நவால் பொடி - சர்க்கரை நோய், பித்தம் போன்ற போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்தது, கணையத்திற்கு மிகவும் ஏற்றது.
ரோஜாபூ பொடி - உடலுக்கு குளிர்ச்சி மற்றும் நிறம் தர கூடியது.
துளசி பொடி - சுவாச கோளாரு, இருமல், சளி தொல்லைகளுக்கு சிறந்தது.
இதன் தொடர்ச்சி பகுதி 2 இல்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments