1. வாழ்வும் நலமும்

காய்கறிகள், பழங்களில் மற்றும் மாமிசங்களில் உள்ள ரசாயனம் பற்றிய கவலையா? இதோ எளிய தீர்வு

KJ Staff
KJ Staff
Washing Vegetables

நாம் சந்தைகளில் வாங்கும் அனைத்தும் ஆர்கானிக், ரசாயனம் கலக்கதவை என்று உறுதியாக சொல்ல இயலாது. பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழங்கள் மீது பூச்சிக்கொல்லி அல்லது ரசாயனம் தெளித்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதை அனைத்தையும் எவ்வாறு நீக்குவது என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  நம் சமயலறை பொருட்களை கொண்டு எளிய முறையில் சுத்தப்படுத்தி விடலாம்.

சுத்தப் படுத்துவது எப்படி?

  • காய்கறிகள், பழங்களை பயன்படுத்தும் முன்பு நம் முன்னோர்கள் பயன்படுத்திய கல் உப்பை பயப்படுத்தி கழுவுங்கள். அதாவது பாத்திரத்தில் காய்கறிகள்,  பழங்கள் போன்றவற்றை நீரில் மூழ்கும் படி போட வேண்டும்.  அந்த நீரில் உப்பை கலந்து 10 முதல் 15 நிமிடங்கள் போட்டு வையுங்கள், பிறகு மற்றொரு தண்ணீரில் கழுவி பின் பயன் படுத்த வேண்டும்.
  • மஞ்சள் தூள் மிகச் சிறந்த கிருமி நாசினி என்பது பலருக்கும் தெரியும். எனவே ஒரு பாத்திரத்தில் சிறிது இளஞ்சுடான நீரில் மஞ்சள் தூளைச் சேர்த்து, அதில் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் மட்டும் வைத்திருந்து கழுவி பயன்படுத்தலாம். அதிகச் சூடான நீரை காய்கறிகள் மற்றும் பழங்கள் மீது பயன்படுத்தக் கூடாது.
  • எலுமிச்சைச் சாறு  மற்றுமொரு சிறந்த கிருமி நாசினி. இதன் சாறு மற்றும் 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவினை கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கரைசலை தண்ணீரில் கலந்து காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவ பயன் படுத்தலாம்.
  • வினிகரை கொண்டும் நாம் காய்கறிகளைச் சுத்தம் செய்யலாம். காய்கறி மற்றும் பழங்களில் உள்ள கிருமிகள் மற்றும் ரசாயனங்களைக் கொல்லும் தன்மை வினிகருக்கு உள்ளது. எனவே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, இரண்டு துளிகள் வினிகரைச் சேர்த்து அதில் காய்கறிகள் மற்றும் பழங்களைப் போட்டு சுத்தம் செய்து சாப்பிடலாம்.
  • கீரைகள், காலிஃளார் போன்றவைகளில் சில நேரங்களில் சிறு புழுக்கள் இருக்கும். இதற்கு நாம் செய்ய வேண்டியது  ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி சிறிது கல் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து கீரைகள்,  காலிஃளார் போட்டு சிறிது நேரம் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்ணுக்கு தெரியாத புழுக்கள் மடிந்து விடும்.  
How to clean Meat
  • அதே போன்று அசைவ உணவுகளான மீன் மேலுள்ள செதில்கள் போன்றவற்றை கல் உப்பு கொண்டு சுத்தப் படுத்தாலம்.
  • மாமிசங்களை சுத்தப்படுத்த சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நீரில் போட்டு வைத்தால் ரசாயனங்களை ஓரளவுக்கு குறைக்க இயலும்.அதே போன்று சுத்தப் படுத்திய பின்பு எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் கலந்து வைத்து சிறிது நேரம் கழித்து சமைக்க பயன்படுத்தலாம்.

மேலே சொன்ன முறைகளில் வீட்டிலே நாம் காய்கறிகள், பழங்கள் மற்றும்  மாமிசங்களை எளிதாக சுத்தம் செய்யலாம். 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Do You Know, How To Wash Vegetables, Fruits And Meat? Published on: 11 August 2019, 11:37 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.