கிராமங்களில் திரும்பும் திசையெல்லாம் அதிகம் காணப்படும் மரங்களில் ஒன்று வேப்ப மரம் (Neem Tree). இதன் வேர் முதல் இலை வரை அனைத்தும் மருத்துவ குணம் படைத்தவை. விவசாயிகளுக்கு வேப்ப மரம் வரப்பிரசாதமாகும் என்பது நாம் அறிந்ததே. ஏனெனில் வேம்பின் அனைத்துப் பாகங்களும் விவசாயத்தில் உரங்களாகவும், பயிர்களில் பூச்சிகளைத் தடுக்கும் காப்பானாகவும் பயன்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தில் வேப்ப மரம் இன்றளவும் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது என்றால் அது மிகையாகாது. கருவேம்பு, நிலவேம்பு, சர்க்கரை வேம்பு, மலை வேம்பு என பலவகைகள் இருந்தாலும் கருவேம்பையே வேம்பு (Neem) எனக் கூறுகிறோம்.
விவசாயத்தில் வேம்பின் பங்கு
-
வேப்பங்கொட்டைக் கரைசலை பயிர்களின் மீது மாலை வேளையில் தெளித்தால், நஞ்சில்லாமல் பயிர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை (Anti-Oxidants) அளிக்கும்.
-
வேப்பிலை, வேப்பங்கொட்டை, வேப்பெண்ணெய் மற்றும் பிண்ணாக்கு சிறந்த தாவரப் பூச்சிக் கொல்லியாக (Plant Insecticide) செயல்படுகிறது.
-
வேம்புவில் உள்ள அசாடிராக்டின் (Azadiraktin) என்ற கசப்பு வேதிப்பொருள் மற்றும் சலானின் (Salanin), மிலியன்டியால் (Miliyandiyal) போன்றவை பூச்சிகளை பயிர்களுக்கு அருகில் அண்ட விடாமல் காக்கிறது.
-
வேப்பிலையின் கசப்புத் தன்மையால் விலங்குகள் (Animals) வயல்களை நோக்கி வருவதை நிறுத்திக் கொள்ளும்.
மருத்துவத் துறையில் வேம்பின் பங்கு
-
புற்றுநோய்க் கட்டிகளை (Cancerous tumors) அழிக்கும் திறன் வேம்புவுக்கு உண்டு.
-
வேப்பிலைக் கரைசலை சிறந்த கிருமி நாசினியாக (Gem Killer) செயல்படுகிறது.
-
வேப்பிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, கொசு விரட்டியாகப் (Mosquito repellent) பயன்படுத்தலாம்.
-
வேப்பெண்ணெய் தடவினால் தோல் நோய்களும், மூட்டுவலியும் விரைவில் குணமடையும்.
-
வேப்பம்பூ சர்க்கரை நோயாளிகளுக்கு (Diabetic Patients) கிடைத்த வரப்பிரசாதம் மற்றும் வேப்பம்பூ கசாயம் குடித்தால் வயிறு சுத்தமாகும்.
-
வேப்பங்கொழுந்தை பறித்து சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
கிராமங்களின் மருந்தகம்:
வேப்ப மரக் காற்றே நம் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தரும். வீட்டிற்கு ஒரு வேப்பமரம் இருந்தால் தொற்றுநோய்களும் (Infections) வந்த இடம் தெரியாமல் அழிந்து போகும். கிராமங்களின் மருந்தகமான (Village Pharmacy) இந்த வேப்ப மரங்களை வெட்டாது பாதுகாக்க வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க..
பாதாமை ஏன் அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது!
பலன்கள் பல அள்ளித் தரும் மஞ்சளின் மகிமைகள்!!
Share your comments