காற்றோட்ட வசதி கொண்ட அறைகளில் வசிப்பது, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரானாத் தொற்றுப் பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகக் கொரோனா 2-அலைக் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கோரதாண்டவம் ஆடி வருகிறது.
மத்திய அரசு நடவடிக்கை (Federal Government action)
அதேநேரத்தில், கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறுக் கட்டுப்படுத்துவது, பொதுமக்கள் பாதிப்பில் இருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது என்பதுத் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள் (New Guidelines)
அவ்வகையில், தற்போது கொரோனாவின் 2வது அலை பரவலை தடுக்க மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
காற்றோட்ட வசதி (Ventilation facility)
அதில், வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும். ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும். எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்த வேண்டும்.
வெளிக்காற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
அறைமுகக்கவசம் (Room shield)
காற்றோட்ட வசதியுடன் கூடிய அறைமுககவசம், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் காற்றோட்ட வசதியையும் இணைத்து தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தொற்று அபாயம் குறைவு (The risk of infection is low)
குறிப்பாக, காற்றோட்டம் நன்றாக இருந்தால், பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும் என மத்திய அரசின் வழிகாட்ட நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!
மரவள்ளி கிழங்கு சாகுபடியில், மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை!
தேங்காய் விலை சரிவால், கொப்பரை உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்!
Share your comments