1. வாழ்வும் நலமும்

தினமும் கீரை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் - மக்களே உஷார்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit : IndiaMART

உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளில் கீரைகள் மிக முக்கிய இடம் பிடிக்கின்றன.

ஆனாலும், தினமும் கீரைகளை உணவில் எடுத்துக்கொள்வது நல்லதல்ல, அவ்வாறு அளவுக்கு அதிகமாகக் கீரைகளைச் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. ஏனெனில் கீரைகள் கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

​சிறுநீரக கல் அபாயம் (Risk of kidney stone)

கீரைகள் எல்லாமே ஆக்சலேட்டுகள் நிறைந்தவை. இந்த ஆக்சலேட்டுகள் அதிகரிக்கும் போது சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். சிறுநீரகக் கற்கள் பொதுவான வகைகள் கால்சியம் ஆக்சலேட் கற்கள் ஆகும். 100 கிராம் கீரையில் 970 மில்லிகிராம் ஆக்சலேட்டுகள் உள்ளன.

அதிலும், வேகவைத்த கீரை ஆக்சலேட் செறிவை ஓரளவுக்குக் குறைக்கலாம். அதேநேரத்தில், கால்சியம் அடிப்படையிலான தயிர் அல்லது பாலாடைக்கட்டி போன்றவற்றுடன் இணைத்து எடுக்கும் போது கல் உருவாவது தடுக்கப்படலாம்.எனினும் இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எதிர்வினைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். 

​​இரத்த மெலிவு பிரச்சனை (Blood thinning problem)

கீரையில் அதிகமாக வைட்டமின் கே, இரத்தத்தை மெல்லியதாகக் குறைக்கும் கனிமம் ஆகும். பக்கவாதத்தைத் தடுக்க இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய மருந்துகள் எடுத்துகொள்பவர்கள் கீரை குறைவாக உட்கொள்ள வேண்டும்.

அரைகப் சமைத்த கீரையில் 444 mcg வைட்டமின் கே உள்ளது. ஒரு கப் கீரையில் 145 mcg சத்து உள்ளது. சமைத்த கீரையில் அதிக வைட்டமின் கே உள்ளது. வெப்பம் ஊட்டச்சத்து உறிஞ்சுவதை அதிகரிக்கிறது. கீரை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் மற்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால், உங்கள் உணவில் இருந்து வைட்டமின் கேயை நீக்கவும் கூடாது.

வைட்டமின் கே தமனி பிரச்சனை, புற்றுநோய் மற்றும் ஆஸ்டியோபொராசிஸ் போன்றவற்றை தடுப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

கனிமம் உறிஞ்சுதல்

கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் கால்சியம் போன்ற தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கலாம். கீரையில் ஆக்சலேட்டுகள், கால்சியம் போன்றத் தாதுக்கள் உறிஞ்சுவதையும் தடுக்கலாம். கீரையில் ஆக்சலேட்டுகள் மற்றும் கால்சியம் இரண்டுமே உள்ளன. அதை அதிக அளவில் உட்கொள்வது உடல் அமைப்பில் கால்சியம் உறிஞ்சுவதைப் பாதிக்கலாம்.
கீரையைப் பாலுடன் சேர்த்து எடுக்கும் போது கால்சியத்தில் இதன் தாக்கம் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் கீரையில் கால்சியம் இருந்தாலும், காய்கறியில் உள்ள ஊட்டச்சத்து, பால் கால்சியத்தை விட பத்தில் ஒரு பங்கு மட்டுமே திறம்பட உறிஞ்சப்படுகிறது.

​கீழ்வாதம்

கீரை கீழ்வாதத்திலும் பங்களிக்கும் என்று கருதப்படுகிறது. கீரையில் ப்யூரின்கள், இராசயன கலவைகள் உள்ளன. கீரையை அளவாக எடுக்கும் போது எப்போதும் பாதுகாப்பாக இருப்பது நல்லது.

கீரைகள் அதிகமாக எடுத்துகொள்வது ஒரு நபரது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு மிகக் குறைவாக காரணமாக இருக்கலாம் என்று சில சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதேநேரத்தில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சிகிச்சைக்கான மருந்துகளை எடுத்துகொள்பவர்களுக்கு இது பிரச்சனையாக இருக்கலாம்.

சமையலறையில் இருக்கும் உணவு பொருள்கள் எல்லாமே சத்தானவை. அதில் கீரையும் ஒன்று. எந்த வகை உணவாக இருந்தாலும் மிதமாக எடுத்துக் கொள்வதே நல்லது.

மேலும் படிக்க...

ரிக்ஷா ஓட்டுனருக்கு ரூ.3 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ்- அடக் கொடுமையே!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

English Summary: Eating spinach daily can cause kidney stones! Published on: 03 November 2021, 09:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.