உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நாம் சாப்பிடும் உணவில் அக்கறை செலுத்த வேண்டியது மிக மிக அவசியம். இதற்காக ஜிம் செல்பவர்களும், விளையாட்டு வீரர்களும், வேகவைத்த முட்டையை அதிகம் எடுத்துக்கொள்கின்றனர்.
தினமும் 2
முட்டை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைத்தாலும், வேகவைத்த முட்டைகளை அதிகமாக சாப்பிடக்கூடாது, ஏனெனில் அது தீங்கு விளைவிக்கும். உங்களுக்கு ஜிம் செல்லும் பழக்கம் இருந்து, நீங்கள் ஒரு நாளைக்கு 2 வேகவைத்த முட்டைகளை சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை.இதனுடன் மற்ற ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிடுங்கள்.
பக்க விளைவுகள்
-
முட்டையில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது, இது இதயம் மற்றும் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.
முட்டை புரதத்தின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது ஊட்டச்சத்தை அள்ளித்தரும் உணவாகும். இதன் மூலம் நமது தசைகள் வலுவடைகின்றன.
-
வேகவைத்த முட்டைகளாலும் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம் என பல சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். எனவே அவற்றை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.
-
சிலர் வேகவைத்த முட்டையை அதிகமாக சார்ந்திருக்கிறார்கள். இதனால், மற்ற உணவுகளில் நாட்டம் இல்லாமல் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்காமல் போய்விடுகிறது.
-
மற்ற ஆரோக்கியமான உணவுகளை விட்டுவிடாதீர்கள்
வேகவைத்த முட்டை டயட்டை உண்பவர்கள் பெரும்பாலும் மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பட்டாணி போன்ற முக்கியமான பொருட்களிலிருந்து விலகி இருக்கத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாக உடலில் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் குறையத் தொடங்குகின்றன. இது சமச்சீர் உணவின் செயல்முறையை பாதிக்கும் என்பதால், வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவதுடன் அத்தியாவசிய உணவுகளை தவிர்க்காமல் இருப்பது நல்லது.
மேலும் படிக்க...
நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!
Share your comments