பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய விதிக்கப்பட்டிருந்தக் காலக்கெடுவை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
6.91 லட்சம் ஏக்கர் (6.91 lakh acres)
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை, முழு வீச்சில் காப்பீடு செய்து வருகின்றனர். இதுவரை, 5.65 லட்சம் விவசாயிகள் பதிவு செய்து, 6.91 லட்சம் ஏக்கர் பயிர் பரப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
நவ.15
தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், சம்பா பருவத்தில், நெல் பயிரை காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மழையால் பாதிப்பு (Damage by rain)
இதனால் காப்பீடு செய்யும் பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டிய நிலையில், ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், கனமழை பெய்து, பயிர்களை நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.
இருப்பினும், சம்பா, தாளடி போன்ற பயிர்களுக்கான காப்பீடு செய்வதற்கான
கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.எனவே விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்றுத் தமிழக அரசு பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்கதை
காலக்கெடுவை நீட்டிப்பதாக அறிவித்துள்ள தமிழக அரசு, தேதி குறிப்பிடப்பட வில்லை. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குறிப்பாக புயல், வெள்ளம் போன்றக் காலங்களில் எதிர்பாராத வகையில் பயிர் பாதிக்கப்படுவதுத் தொடர்கதையாகி வருகிறது.
பெரும் இழப்பு
அதிலும் கணக்கில்லாமல் கொட்டித் தீர்த்து வரும் மழையால், டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய இயற்கை சீற்றங்களின்போது ஏற்படும் இழப்பில் இருந்து விவசாயிகள் தப்பித்துக்கொள்ள ஏதுவாக, பயிர்க்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!
புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
Share your comments