நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் பிரசார களத்தில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வேட்பாளர்களுடன் மூன்று நபர்கள் மட்டுமே ஓட்டு சேகரிக்க செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் புதிதாக களம் இறங்கும் வேட்பாளர்களை குறி வைத்து, அவர்களிடம் பேட்டி காண்பது, அவர்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதாக ஆசை வார்த்தை கூறி, பணம் பறிக்கும் முயற்சியுடன் 'பலே' கும்பல் களம் இறங்கியுள்ளது.
போலி நிருபர்கள் (Fake Reporters)
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில், பிரபல பத்திரிக்கைகள் மற்றும் 'டிவி' சேனல்களின் பெயர்களில், போலி நிருபர்கள், வேட்பாளர்களை வட்டமிட துவங்கியுள்ளனர். தங்களைப் பற்றிய செய்தி வெளியாகும் என்ற ஆவலில், வேட்பாளர்கள் அவர்களிடம் பணத்தை பறிகொடுத்து தவிக்கின்றனர்.
போலி நிருபர்கள் பற்றிய தகவல் அறிந்து, உண்மையான பத்திரிக்கையாளர்கள் அந்த இடத்திற்கு செல்லும் முன், மோசடி நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றனர். முன்பெல்லாம், ஆண்கள் மட்டுமே இவ்வகை மோசடிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது இளம் பெண்களும் நிருபர்கள் போர்வையில் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், உண்மையான பத்திரிக்கையாளர்களுக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மேலும் படிக்க
தமிழகத்தில் 600க்கும் அதிகமான இடங்களில் சார்ஜிங் மையம்!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆதார் கட்டாயமில்லை: மத்திய அரசு!
Share your comments